சென்னை: ஜூன் 1 முதல் செப்., 30 வரையிலான காலகட்டத்தில் 328.4 மி.மீ., மழை பயெ்ய வேண்டிய நிலையில் 389.1 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இது 18 சதவீதம் அதிகம் ஆகும். மே 30 ல் துவங்கிய தென் மேற்கு பருவமழை, தற்போது விலகத் துவங்கி உள்ளது. இது இயல்பை விட 18 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகவும், டெல்டா மாவட்டங்களில் குறைவாகவும் பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்த பட்டியலையும் வெளியிட்டு உள்ளது.ஜூன் 1 முதல் செப்., 30 வரை மாவட்ட வாரியாக பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவையும்,பெய்த மழை அளவையும் வானிலை மையம் வெளியிட்டு உள்ளது. இதன்படிஅதிகம் மழை பதிவான மாவட்டங்கள்
நெல்லையில் வழக்கமாக 92.5 மி.மீ., மழை பதிவாகும் நிலையில் 337.9 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் இம்மாவட்டத்தில் தான் அதிகமாக 265 சதவீதம் அதிகம் பதிவாகி உள்ளது.தேனி மாவட்டத்தில் 297.2 மி.மீ., மழை பதிவாகும் நிலையில் 376.2 மி.மீ., மழை பெய்துள்ளது. இதுவும் 58 சதவீதம் அதிகம் ஆகும்தென்காசி மாவட்டத்தில் 172.7 மி.மீ.,மழை பதிவாகும் நிலையில் 272.9 மி.மீ., பதிவாகியது. இது 58 சதவீதம் அதிகம் ஆகும்.சேலம் மாவட்டத்தில் 441.7 மி.மீ.,மழை பதிவாகும் நிலையில் 672.9 மி.மீ., பதிவாகியது. இது 57 சதவீதம் அதிகம் ஆகும்.நீலகிரி மாவட்டத்தில் 842.4 மி.மீ., மழை பதிவாகும் காலத்தில் 1273.9 மி.மீ., பதிவாகியது. இது 51 சதவீதம் அதிகம்விருதுநகரில் 196.4 மி.மீ., மழை மழை பதிவாகும் நிலையில் 289 மி.மீ., பெய்துள்ளது. இது 47 சதவீதம் அதிகம்புதுக்கோட்டையில் வழக்கமாக 387.8 மி.மீ.,மழை பதிவாகும் நிலையில் இந்த முறை 553.8 மி.மீ.,மழை பதிவாகியது. இது 43 சதவீதம் அதிகம் ஆகும்.சென்னையில் 448.5 மி.மீ.,மழை பதிவாகும் காலத்தில் இந்த முறை 641.6 மி.மீ., மழை பதிவாகியது. இது 43 சதவீதம் அதிகமாகும்.கோவையில் இந்த காலத்தில் 689.1 மி.மீ., மழை பதிவாகும் காலத்தில் இந்த முறை 970.3 மி.மீ., மழை பதிவாகியது இது 41 சதவீதம் அதுிகம் திருவள்ளூரில் 463.7 மி.மீ., மழை பதிவாகும் நிலையில் 655.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இது 41 சதவீதம் அதிகம் ஆகும்.திருவண்ணாமலையில் 450.5 மி.மீ., மழை பதிவாகும் நிலையில் 554.2 மி.மீ., மழை பெய்துள்ளது. இதுவும் 41 சதவீதம் அதிகம் ஆகும்செங்கல்பட்டில் 398.3 மி.மீ., மழை பதிவாகும். இந்த முறை 548.5 மி.மீ., பதிவாகியது. இது 38 சதவீதம் அதிகம்விழுப்புரத்தில் 395 மி.மீ., மழை பதிவாகும் நிலையில் 538.7 மி.மீ., மழை பெய்துள்ளது. இதுவும் 36 சதவீதம் அதிகம் ஆகும்காஞ்சிபுரத்தில் 472 மி.மீ., மழை பதிவாகும் நிலையில் 639 மி.மீ., மழை பெய்துள்ளது. இதுவும் 35 சதவீதம் அதிகம் ஆகும்திருப்பூரில் 155.9 மி.மீ., மழை பதிவாகும் நிலையில் 206.9 மி.மீ., மழை பெய்துள்ளது. இதுவும் 33 சதவீதம் அதிகம் ஆகும்தூத்துக்குடி மாவட்டத்தில் 67.3 மி.மீ.,மழை பதிவாகும் நிலையில் 86.4 மி.மீ., பதிவாகியது. இது 27 சதவீதம் அதிகம் ஆகும்.வேலூரில் 431.3 மி.மீ., பெய்ய வேண்டிய நிலையில் 527.4 மி.மீ., மழை பெய்துள்ளது. இதுவும் 22 சதவீதம் அதிகம் ஆகும்குறைவான மழை பதிவான மாவட்டங்கள்
மயிலாடுதுறையில் எப்போதும் 304.7 மி.மீ., மழை பதிவாகும் ஆனால், இந்தாண்டு 205 மி.மீ., மழை மட்டுமே பதிவாகி உள்ளது. இது 33 சதவீதம் குறைவாகும்.அரியலூர் மாவட்டத்தில் 314.8 மி.மீ., மழை பதிவக வேண்டிய காலத்தில் 252.5 மி.மீ., மழை மட்டுமே பதிவானது. இது 20 சதவீதம் குறைவாகும்.தஞ்சாவூரில் 302.8 மி.மீ., மழை பதிவாகும். ஆனால், இம்முறை 243.9 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இது 19 சதவீதம் குறைவாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 399.1 மி.மீ., மழை பதிவாகும் காலத்தில் 334.7 மி.மீ., மட்டுமே பதிவானது. இது 16 சதவீதம் குறைவாகும்.நாமக்கல் மாவட்டத்தில் எப்போதும் 331.8 மி.மீ., மழை பதிவாகும் காலத்தில் தற்போது 280.9 மி.மீ., மட்டுமே பதிவானது. இது 15 சதவீதம் குறைவாகும்.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சீசனில் 12 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. வரவிருக்கும் வடகிழக்கு பருவத்தில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.