உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி

நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி

ஓசூர், தேசிய நெடுஞ்சாலை யில் 'வாக்கிங்' சென்ற தாய், மகன் கார் மோதி பலியாகினர். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கயாமுதீன். இவரது மனைவி ஸ்வேதாபானு, 35. இவர்களுக்கு, மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லகானகொத்தப்பள்ளியில் தங்கி, அப்பகுதி தனியார் நிறுவனத்தில் கயாமுதீன் வேலை செய்கிறார். அவரது மனைவி ஸ்வேதா பானு, கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், அட்டகுறுக்கி பகுதியில், தன் இரண்டாவது மகன் சமீர், 15, என்பவருடன் நேற்று காலை 6:30 மணிக்கு நடைபயிற்சி சென்றார். அப்போது, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியில் தங்கி, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்பேனீஸ் நாயர், 38, ஓட்டிச் சென்ற, 'மாருதி எர்டிகா' கார், தாய், மகன் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட ஸ்வேதாபானு, சமீர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சூளகிரி போலீசார், ஸ்பேனீஸ் நாயர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி