உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய் அடித்து கொலை: 14 வயது மகன் கைது

தாய் அடித்து கொலை: 14 வயது மகன் கைது

உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கீழ்க்குப்பம் வேலுாரைச் சேர்ந்தவர் குணசேகரன், 45; லாரி டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி, 40; இவர்களுக்கு, 16 வயதில் மகள், 14 வயதில் மகன் உள்ளனர். கடந்த 20ல் தீ பாவளிக்கு கணவர் வாங்கி வந்த புடவையை மகேஸ்வரி வாங்க மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மகேஸ்வரியை குணசேகரன் அடித்துள்ளார். இதில், கோபமடைந்து வயல்வெளிக்கு சென்ற மகேஸ்வரி, அன்று மாலை, பன்னீர்செல்வம் என்பவரின் விவசாய நிலத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். திரு நாவலுார் போலீசார் விசாரித்தனர். அதில், மகேஸ்வரியை அவரது 14 வயது மகன் அடித்து கொலை செய்தது தெரிந் தது. சரியாக படிக்கவில்லை என மகேஸ்வரி திட்டியதாலும், தந்தையிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், மகேஸ்வரியை அடித்து கொ ன்றார். போலீசார், சிறுவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ