உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 500 தனியார் மின்சார பஸ்கள் இயக்க 100 வழித்தடம் தேடுகிறது எம்.டி.சி.,

500 தனியார் மின்சார பஸ்கள் இயக்க 100 வழித்தடம் தேடுகிறது எம்.டி.சி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேட்டரி பேருந்துகளை இயக்க 'டெண்டர்' வெளியிட்டு, முதற்கட்டமாக 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த பேருந்துகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. இந்நிலையில், மின்சார பேருந்துகளை எந்த வழித்தடங்களில் இயக்குவது என்பது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகர பேருந்துகள் 3,454; இதன் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7,000 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இதை, மாநகர போக்குவரத்து கழகத்தால் மட்டுமே முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது. எனவே, கட்டண உயர்வு இன்றி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, 1,000 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளோம்.முதற்கட்டமாக, 100 'ஏசி' பேருந்துகள் உட்பட, 500 மின்சார பேருந்துகளை இயக்க, அசோக் லைலாண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ஓ.எச்.எம்.குளோபல் மொபிலிடி பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஒப்பந்தத்தின்படி, பேருந்துகளை 12 ஆண்டுகள் பராமரித்து இயக்குவது, உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது, ஓட்டுனரை பணியமர்த்துவது உள்ளிட்டவை ஒப்பந்ததாரரின் பணி.மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நடத்துனர் நியமிக்கப்பட்டு, வழக்கமான கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம்.ஒப்பந்ததாரருக்கு கி.மீ., ஒன்றுக்கு 'ஏசி' வசதி இல்லாத மின்சார பேருந்துகளுக்கு, 77.16 ரூபாய், 'ஏசி' பேருந்துகளுக்கு 80.86 ரூபாய், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த பேருந்துகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் சராசரியாக, 180 கி.மீ., வரை இயக்க முடியும்.பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய பணிமனைகளில் இருந்து, சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும். தனியார் இயக்கும் 500 மின்சார பேருந்துகளில் 50 சதவீதம், ஏற்கனவே செல்லும் வழித்தடங்களில் கூடுதலாக இயக்கப்படும்.மீதமுள்ள 50 சதவீத பேருந்துகளை புது வழித்தடங்களில் இயக்க உள்ளோம். இதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், இந்த பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ethiraj
அக் 27, 2024 05:08

Travelling in electric bus is a pleasure. There are several buses in Bangalore City It must be under the control of private operators only The bus operation requires meticulous operation and maintenance No concession to be given .Even CM of state must pay fare.


KRISHNAN R
அக் 26, 2024 14:11

ஆஹா ஆஹா


பாமரன்
அக் 26, 2024 12:29

தனியார் மயம் பொது போக்குவரத்தில் தவிர்க்க முடியாதது. கஷ்டப்பட்டு மக்கள் பணத்தில் உருவாக்கிய ரயில்வே மற்றும் விமான தடங்கள் தனியார் வசம் கொடுப்பதை கேட்க துப்பில்லாத பீஸ்கள் எந்த அரசு கட்டமைப்பும் உபயோகத்துக்கு குடுக்காமல் கிமீ ஓட்டினா காசு எனும் ஒப்பந்தத்தை கேள்வி கேட்க அருகதையில்லாதவர்கள். தமிழ் நாட்டில் மற்றும் மிகச்சில மாநிலத்தில் மட்டுமே இன்னும் பெரும்பகுதி பேருந்துகள் கட்டுப்படுத்தப்பட்ட கட்டணங்களில் அரசாங்கம் நடத்துகிறது. இதில் இருந்து சிறிது சிறிதாக வெளியே வருவது நல்லதுதான். லாபமில்லாத மலைப்பகுதி மற்றும் கிராம வழித்தடத்தில் மட்டுமே அரசு இயக்கலாம்.


ராமகிருஷ்ணன்
அக் 26, 2024 12:27

சுருட்டியதை சும்மா வைத்து இருக்க முடியாது, ஏதாவது தொழில் செய்து பெருக்க வேண்டும். E D க்கு கணக்கு காண்பிக்க உதவும்.


Srinivasan Ramabhadran
அக் 26, 2024 11:53

அப்படி என்றால், 1969-70களில் தனியார் திறமையாக நடத்தி வந்த பேருந்துகள்/ தடங்கள் ஏன் தேசியமயமாக்கப்பட்டன. அப்பொழுது இருந்த அரசு யாரை பழி வாங்க இந்த முடிவு எடுத்தது


Rajarajan
அக் 26, 2024 11:31

இனி மத்திய மற்றும் தமிழக அரசின் நிதி நிலைமை கதி என்ன தெரியுமா ?? சட்டி சுட்டதடா, கை விட்டதடா நிலைமை தான். அருகிலுள்ள புதுச்சேரியில் பெரும்பாலும் தனியார் பேருந்துகள் தான். தமிழகத்தில் கூட புறநகர் பேருந்து சேவை மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும். நகர்ப்புற பேருந்துகள் பெரும்பாலான வழித்தடத்தை தனியாருக்கு கொடுத்துவிடலாம். அரசு விரைவு பேருந்துகளும் பெரும்பாலும் அவ்விதமே. வழித்தட உரிமை / தரம் / நேர கட்டுப்பாடு மற்றும் டிக்கெட் விலையை மட்டும் அரசு கவனித்தால் போதும்.


Chennaivaasi
அக் 26, 2024 11:19

இந்த பேருந்து வாங்குவதற்கான நிதி உதவி மத்திய அரசிடம் இருந்து என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாம். பிரதம மந்திரியின் ஈ டிரைவ் திட்டத்தின் மூலம் பங்களிப்பு தரப்படுகிறது. வழக்கம் போல ஸ்டிக்கர்.


தமிழ்வேள்
அக் 26, 2024 11:16

தனியார் மூலம் இயக்கினால் , அது ஒன்றிரண்டு முதலாளிகள் இல்லாமல் , ஒட்டுமொத்த கார்பொரேட் அமைப்பு மூலமாகவே இருக்கவேண்டும் ...மேற்கு மாவட்டங்களில் தனியார் பஸ்களில் கண்டக்டர் என்ற பெயரில் விடலை டிக்கெட்டுகள் அடிக்கும் கூத்து அராஜகம் சென்னையிலும் வரக்கூடாது .....புகார் பெறும் அமைப்பும் , தவறு செய்யும் கண்டக்டர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் இருப்பது அவசியம் ...


Rpalnivelu
அக் 26, 2024 10:49

தகர உண்டி குலுக்கிகளின் பாச்சா த்ரவிஷன்களிடம் பலிக்காது. செருப்பால் அடிப்பார்கள். எப்படியோ தனியார் மயம் நல்லதே


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 26, 2024 10:18

படிப்படியாக பயன்பாட்டிற்கு.. என்கிற வார்த்தை மிகமிக பிரபலம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மூர்க்க கட்சியின் தேர்தல் அறிக்கைகளை படிக்கவும் . அதில் உண்மையை தவிர வேறு ஒன்றும் இருக்க வாய்ப்பே இல்ல. அதை எல்லாம் நிறைவேற்றி மக்கள் சந்தோஷத்தில் மனநிம்மதியால் போதையில்லாமல் பரிமளிக்கிறார்கள்.. இத்துடன் விளையாட்டுச்செய்திகள் இனிதே முடிவடைந்தது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை