உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் டிரேடிங்கில் பல கோடி மோசடி; ம.பி., ஆசாமி கைது

ஆன்லைன் டிரேடிங்கில் பல கோடி மோசடி; ம.பி., ஆசாமி கைது

கோவை: 'ஆன்லைன் டிரேடிங்' செய்வதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்த, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவரை, கோவை போலீசார் கைது செய்தனர்.கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவரின், 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு தொடர்பு கொண்ட நபர், 'ஆன்லைன் டிரேடிங்' செய்து அதிக லாபம் ஈட்டலாம் என குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, 'வாட்ஸ் அப்' குழுவில் இணைக்கப்பட்டார்.அக்குழுவில், பங்குகளை வாங்குவது, விற்பது போன்ற தகவல்கள் அனுப்பப்பட்டன. குழுவில் இருந்த நபர்கள், தங்களின் 'டிரேடிங்' லாபங்களை குழுவில் பதிவிட்டு வந்தனர். இதைப்பார்த்த இளைஞர், உண்மை என நம்பி, அவர்கள் அளித்த வங்கி கணக்கு களுக்கு, 14.5 லட்சம் ரூபாயை அனுப்பினார்.பின், முதலீட்டு பணம் மற்றும் லாபத்தை திருப்பி கேட்டபோது, அந்நபர்கள் மேலும் பணம் செலுத்தச் சொல்லியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இளைஞர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய பிரதேசம் சென்ற கோவை போலீசார், செல்போன் டவர் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட நபர் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தனர். மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் திவாரி, 34 என்பது தெரியவந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை குறிவைத்து, ரூ.20 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, கோவை அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
ஜூன் 07, 2025 19:27

மண்ணாங்கட்டி, சரி பிடிச்சீங்க அப்புறம் என்ன விசாரணை விசாரணை வழக்கு தள்ளிவைப்பு???அவன் மோசடி செய்த பல கோடிகளை யாரிடமிருந்து பிடுங்கினானோ???இந்த போலீஸ் துறை என்னும் அவலத்துறை திருந்தும் வரை இது தொடரும்


அப்பாவி
ஜூன் 07, 2025 15:42

டபுள் இஞ்சின் சர்க்கார்லே உங்களுக்கு என்னடா குறை?


Kalyanaraman
ஜூன் 07, 2025 09:11

உள்ளூர்ல விசாரணை செய்வதற்கே போலீசுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கும். இங்கிருந்து மத்திய பிரதேச போயிருக்காங்கனா பாத்துக்கோங்க...


சிந்தனை
ஜூன் 07, 2025 08:11

நமது பாரம்பரிய நீதி முறையை கல்வி முறையை பண்பாட்டை எல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்றோம் ஆனால் கொள்ளையடிக்க வந்த, கற்பழிக்க வந்த, கொலை செய்ய வந்த வெள்ளையன் கொடுத்ததை ஏற்றுக் கொண்டோம் அதன் பலன் நம் குழந்தைகளும் கொள்ளை அடிப்பவர்களாக கற்பழிப்பவர்களாக திருடுபவர்களாக ஆகிறார்கள் ஆனால் இவற்றையெல்லாம் வாரி வாரி கொடுத்தவர்களுக்கு தண்டனை இல்லை.... அதை வாங்கியவர்களுக்கு தான்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை