உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகராட்சி நிர்வாக பணியாளர் தேர்வு சந்தேகம் எழுப்புகிறார் அன்புமணி

நகராட்சி நிர்வாக பணியாளர் தேர்வு சந்தேகம் எழுப்புகிறார் அன்புமணி

சென்னை:'நகராட்சி நிர்வாகத் துறை பணியாளர் தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால், நேர்காணல் வீடியோவை வெளியிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள, 2,566 பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளை பார்க்கும்போது, முறைகேடுகள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மிகவும் வெளிப்படையாக நடக்க வேண்டிய ஆள்தேர்வு முறை, சந்தேக வளையத்தில் மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்வது சரியல்ல. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் முடிந்தவுடன், அனைத்து வகை தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், முடிவுகளை அறிவிக்காமல், நேர்காணலில் பங்கேற்காதவர்களுக்கு, மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, அவர்களை நேர்காணலுக்கு அண்ணா பல்கலை அழைத்துக் கொண்டிருக்கிறது. இது தான் தேர்வர்கள் மத்தியில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இது குறித்து விளக்கம் அளிப்பதுடன், ஆள்தேர்வு முடிவுகளை, நகராட்சி நிர்வாகத்துறையும், அண்ணா பல்கலையும் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆள்தேர்வு நடைமுறைகள் அனைத்தும் நேர்மையாக நடந்தன என்பதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு தேர்வரும் எழுத்து தேர்வு, நேர்காணலில் எடுத்த மதிப்பெண்கள், நேர்காணலின் வீடியோ பதிவை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ