உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவ., 5ல் மா.செ.,க்கள் கூட்டம்

நவ., 5ல் மா.செ.,க்கள் கூட்டம்

சென்னை: அ.தி.மு.க., தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம், வரும் 5ம் தேதி, காலை 10:30 மணிக்கு, சென்னையில் நடக்க உள்ளது. மாவட்டச் செயலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சி யிருந்து அதிரடியாக பழனிசாமி நீக்கியுள்ளார். இதை எதிர்த்து வழக்கு தொடர்வதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்நிலையில், தன் கட்டுப்பாட்டில் கட்சி இருப்பதை காட்டவும், செங்கோட்டையன் விவகாரம் குறித்து விவாதிக்கவும், மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை பழனிசாமி கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை