உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 பேர் கொலை: 4 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது ஐகோர்ட்

3 பேர் கொலை: 4 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சங்கரன்கோவிலில் இரு தரப்பு மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் அருகே உடப்பன்குளத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த இரு தரப்பு மோதலில் காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றம் பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.இது குறித்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு. குற்றவாளிகள் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்,' குற்றத்தின் தன்மை மரண தண்டனை விதிப்பதற்கு போதுமானதாக இல்லை. உச்சநீதிமன்றம் விதித்துள்ள அளவுகோள், இந்த வழக்கில், மரண தண்டனை விதிக்க போதுமானதாக இல்லை' எனக் கூறியுள்ளனர்.மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் 4 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Indhiyan
மார் 20, 2025 23:17

இது வழங்கப்பட்ட தீர்ப்பு மாதிரி இல்லை. வாங்க பட்ட தீர்ப்பு மாதிரி இருக்கு. எவ்வளவு லட்சங்கள் கை மாறியதோ? எந்த அரசியல்வாதி கை வைத்தாரோ? நீதிபதிகளும் ஊழலுக்கு உட்பட்டு இருப்பது ரொம்ப கேவலமாக இருக்கிறது


m.arunachalam
மார் 20, 2025 22:08

எதை யாருக்கு நிரூபிக்க கொலை நடந்தது ?. மனித தன்மையையா , மிருக தன்மையையா ? மக்களின் வரிப்பணம் வீண் .


SP
மார் 20, 2025 21:49

தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, முன்பு மூன்று பேருக்கு மரண தண்டனையும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த நீதி அரசர் எந்த அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை வழங்கினார் தற்சமயம் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகவும் ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும் ரத்து செய்து இருப்பது எந்த அடிப்படையில். சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதானே ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் வெவ்வேறு சட்டங்களா?


Nandakumar Naidu.
மார் 20, 2025 21:36

கேவலமான தீர்ப்பு.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
மார் 20, 2025 21:34

உச்ச நீதிமன்றம் விதித்த அளவுகோல் என்ன சாமியோவ்? விளங்கிடும். நீங்களும் உங்க நீதியும் தீர்ப்பும்.


Iniyan
மார் 20, 2025 20:59

Needhi மன்றங்கள் நாட்டில் குற்றம் அதிகரிப்பதற்கு முதல் காரணம்.


Ramesh Sargam
மார் 20, 2025 22:07

உண்மை. நானும் அப்படித்தான் எண்ணுகிறேன்.


Raj
மார் 20, 2025 20:58

இதற்கு விடுதலை செய்திருக்கலாம். இனி கொலை செய்தால் ஆயுள் தண்டனை தான். ஆயுள் தண்டனை பெற்று உள்ளே நல்ல சாப்பாடு தான் அப்புறம் என்ன. குப்பை சட்டம். இப்பொழுது எல்லாம் குற்றவாளிகளை விடுவிக்க தான் நீதிமன்றங்கள். கேவலம் இந்திய சட்டம்.


Ramesh Sargam
மார் 20, 2025 20:36

சமீபத்திய நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள், நீதிமன்றங்களின் மீதான கொஞ்சநஞ்ச மதிப்பையும் இழக்கவைக்கிறது. நீதிமன்றங்களே இப்படி குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால், யார்தான் இனி நீதி வேண்டி நீதிமன்றங்களை அணுகுவார்கள்.


अप्पावी
மார் 20, 2025 20:33

பின்னே எப்பிடி கொன்னா மரணதண்டனை குடுப்பீங்க கோர்ட்டாரே? கொலையில் தீவம் இல்லியாம். இனிமே வெஷம் வெச்சு கொல்லுங்கப்பா. போறவன் அமைதியா போய்ச்சேந்துருவான்.


D Natarajan
மார் 20, 2025 20:29

எல்லா நீதி மன்றங்களும் உச்ச நீதி மன்றமாக மாற்றப்படவேண்டும் . அப்போது தான் மேல் முறையீடு செய்ய முடியாது. அடுத்து இவர்கள் விடுதலை ஆவார்கள் . மேல்முறையீடு, பிணை ஒழிக்க படவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை