உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருக பக்தர்கள் மாநாடு: கின்னஸ் சாதனை படைக்க திட்டம்

முருக பக்தர்கள் மாநாடு: கின்னஸ் சாதனை படைக்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் ஜூன் 22 நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைக்கவுள்ளதாக ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

ஹிந்து முன்னணி சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில மாநாடு நடத்தப்படும். கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இதற்கு முன்பு மாநில மாநாடு நடத்தப்பட்டது. கடைசியாக 2018ல் பல்லடத்தில் நடந்தது. இதில் ஒரு லட்சம் குடும்பங்கள் கலந்து கொண்டு மகாலட்சுமி யாகமும், 1008 நாட்டு மாடுகள், 108 குதிரைகள் வைத்து பூஜையும் நடத்தப்பட்டது.முருக பக்தர்கள் ஒருங்கிணைப்புகொரோனா பரவல் காரணமாக 2023ல் நடக்க வேண்டிய மாநாட்டிற்கான பணிகள் தள்ளிப்போனது. ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்தப்படும். திருப்பரங்குன்றம், சென்னிமலை விவகாரத்தையடுத்து முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 'முருக பக்தர்கள் மாநாடு'எனும் தலைப்பில் மதுரையில் நடத்தப்படுகிறது.திருப்பதி கோயில் எப்படி உலகம் போற்றும் வகையில் பாதுகாத்து, பராமரிக்கப்படுகிறதோ, அதுபோல் முருகனின் அறுபடை வீடுகளும் பராமரிக்கப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படும். மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அடுத்து 3 நாட்கள் மட்டும் உள்ளதால் அதிக அளவில் மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.பக்தர்களுக்கு அறுபடை வீடுகளின் பிரசாதம் வழங்க திட்டமிடப்பட்டது. அதற்கு உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதால், பாதாம், முந்திரி, வேர்கடலை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் ஜூன் 22 மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும்.கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி கவசம் பாட தொடங்கியதும், திரையில் வரிகள் காட்சிப்படுத்தப்படும்.இந்நிகழ்வு சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மாநாட்டிற்கு வர முடியாதவர்கள் வீடுகளில் இருந்து சரியாக மாலை 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடலாம்.

முன்பதிவு அவசியம்

மாநாட்டிற்கு வருவோர் முன்னதாக பதிவு செய்ய சமூக வலைதளங்களில் 'க்யூஆர்' குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இது ஹிந்து முன்னணி சார்பில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.தனது சொந்த வாகனத்தில் வருவோர் போலீசில் பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதனால், மாநாட்டுக்கு வரும் பக்தர்கள் தனது மாவட்டத்தில் பதிவு செய்து வர வேண்டும். அப்போது தான் மதுரைக்குள் போலீசார் அனுமதிப்பர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Matt P
ஜூன் 21, 2025 08:19

எல்லோரும் முருகன் என்ற பெயர் என்றாலே தமிழ் கடவுள் என்கிறார்கள். முருகன் என்றால் தமிழில் அழகன் அல்லது முருகு என்றால் அழகு என்று தமிழில். குஜராத்தை சேர்ந்த ஒருவரை இங்கே வெளிநாட்டில் சந்தித்த்தேன். அவர் பெயர் முருக தாஸ் அதாவது முருகனடிமை. என்று பெயர். முருகனையும் சுப்ரமணியரையும் தமிழ்நாட்டில் ஒன்றாக தான் பார்க்கிறோம் தமிழ்நாட்டில். முருகனாக இருந்தாலும் சுப்ரமணியராக இருந்தாலும் இந்து கடவுள். முருகன் என்ற பெயர் தமிழ்நாட்டு பெயராகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.


பேசும் தமிழன்
ஜூன் 20, 2025 20:05

முருகன் கடவுள் மாநாடு.... திருட்டு மாடல் ஆட்களுக்கு வீட்டுக்கு அனுப்பும் மாநாடாக இருக்கும்.


Mahendran Puru
ஜூன் 20, 2025 18:27

கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை விட என்ன சாதனை இருந்துவிடப் போகிறது பண்டைய தமிழனின் நாகரீகத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் வாடா இந்திய பாஜகவிற்கு கூஜா தூக்குவதை விடு தமிழா. ராமனும் நம் சாமிதான். முருகன் நம் மொழிக்கு இலக்கணம் சொல்லிய கடவுள். இந்துவாக இரு. இந்துத்வ ஒரு விஷம். மதம் பிடித்தவன் வியாபாரத்தில் சிக்கி சின்னா பின்னமாகாதே


Rengaraj
ஜூன் 20, 2025 17:20

மதுரை சித்திரை திருவிழாவுக்கு வருடாவருடம் மதுரையில் பத்து லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். அதற்கெல்லாம் பிரச்சினை வந்தது இல்லை. போலீஸ் கெடுபிடி இல்லை. இதற்கு ஏன் இத்தனை பிரச்சினை என்றால் , இதை நடத்துவது இந்துமுன்னணி , பின்னணியில் பாஜக . மாநாட்டுக்கு வருபவர்களை இந்துக்களாக பார்ப்பதா ? அல்லது பாஜக கட்சியினராக பார்ப்பதா என்ற குழப்பம் எதிர்க்கட்சிகளுக்கு வருவது இயற்கையே . இந்த மாநாட்டை இந்துக்களாக இருப்பவர்கள் ரசிப்பார்கள், பாராட்டுவார்கள், பங்கேற்பார்கள் . அரசியலாக பார்ப்பவர்கள் கூடுகிற கூட்டத்தை பார்த்து பொறாமை கொள்வார்கள் .பாஜகவுக்கு இதில்தான் அரசியல் லாபம். என்னதான் இந்துக்கள் பல கட்சிகளில் இருந்தாலும் பாஜகவுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்துக்களின் சக்தியை பறைசாற்றி அண்ணாதிமுகாவுக்கு தங்கள் வலிமையை காட்டுவதற்கு , அதன் மூலம் கூட்டணி கணக்குகளை சாதிக்கவும் அந்த கட்சியை செக் வைப்பதற்கும் இந்த மாநாட்டை நன்றாகவே பயன்படுத்தவே செய்யும் . ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கப்படும்.


Kulandai kannan
ஜூன் 20, 2025 16:03

திராவிட விஷத்தை நீக்க 15 ஆண்டு பாஜக ஆட்சி நடைபெற வேண்டும்.


முருகன்
ஜூன் 20, 2025 15:52

தேர்தல் வருவதால் உலக சாதனை படைக்க வேண்டும்


அசோகன்
ஜூன் 20, 2025 15:44

ஹிந்துக்களின் பெண்கள் என்று கேவமாக பேசியபோதும் விசில் அடித்து கைத்தட்டும் ஹிந்துக்களை இந்த மாநாடு திருத்தட்டும்........


venugopal s
ஜூன் 20, 2025 14:17

வரப்போகும் ஐந்து லட்சம் பேரில் வட இந்திய இறக்குமதி தான் அதிகமாக இருக்கும்!


Matt P
ஜூன் 21, 2025 08:23

முருகன் என்ற பேர் தெரிந்தும் தமிழ் கடவுள் என்று கொண்டாடினாலும் இந்துக்களாக ஓன்று சேர்கிறார்கள் என்றால் பாராட்டலாமே. துர்கா அம்மையாரும் வரலாம்.


SJRR
ஜூன் 20, 2025 12:32

அனைவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக மிக அவசியம். கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவம் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். வாகன நெரிசலை தடுக்க முன்னேற்பாடுகள் தயாராக இருக்கவேண்டும். மாநாட்டிற்கு ஐந்து லட்சம் பேர் வருவது கின்னஸ் சாதனை அல்ல. இந்த அளவிற்கு கூட்டம் வந்தும் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நிகழாமல் நிகழ்ச்சி நல்லபடியாக முடிவுற்றல் தான் கின்னஸ் சாதனை. மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
ஜூன் 20, 2025 12:07

பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநாடு ஏட்பாளர்கள் எடுக்கவேண்டும். ஒரு சிறு தவறு ஏட்பட்டாலும், ஆளும் திருட்டு திமுகவுக்கு சாதகமாகப் போய்விடும். ஜாக்கிரதை. எச்சரிக்கையாக ஏட்பாடுகள் நடக்கட்டும். முருகனுக்கு அரோஹரா.