உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறுபடை வீடுகளை தரிசிக்க சிறப்பு ரயில்கள்; முருக பக்தர்கள் எதிர்பார்ப்பு

அறுபடை வீடுகளை தரிசிக்க சிறப்பு ரயில்கள்; முருக பக்தர்கள் எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் ஜூன் 22ல் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும் 'குன்றம் காக்க... கோயிலைக் காக்க...' என்ற பெயரில் மாநாடு நடக்கிறது.இம்மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஒன்று திரள்கின்றனர். அவர்களின் வசதிக்காக அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.அறுபடை வீடுகளில், மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், சோலைமலை, திண்டுக்கல்லில் பழநி, துாத்துக்குடியில் திருச்செந்துார், தஞ்சாவூரில் சுவாமிமலை, திருவள்ளூரில் திருத்தணி உள்ளன. மாநாட்டிற்கு வர பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாகவும், திருச்செந்துாரில் இருந்து திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், திருப்பரங்குன்றம் வழியாகவும், திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, சுவாமிமலை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியாகவும் சிறப்பு ரயில்களை இயக்கலாம்.பக்தர்கள் கூறுகையில், ''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டில் பங்கேற்போருக்கு வாகன கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால் சிரமமின்றி பக்தர்கள் பங்கேற்க முடியும். இதற்கான வரவேற்பையடுத்து மதுரை வழியாக பழநி - திருச்செந்துார் இடையே, சுவாமிமலை வழியாக திருத்தணி - மதுரை இடையே அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் நிரந்தர ரயில்களை இயக்கலாம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mahendran Puru
ஜூன் 16, 2025 13:34

முருக பக்தர்கள் மாநாடு அமைப்பாளர்கள் கையில் தான் ஆட்சியும் ரயில் நிர்வாகமும் இருப்பதால் இலவச ரயில் விடலாம். நல்ல எதிர்பார்ப்பு. நடைமுறை சாத்தியமே.


புரொடஸ்டர்
ஜூன் 16, 2025 11:26

மயில்களில் பயணம் செய்து சாதனை செய்யவேண்டும்.


vivek
ஜூன் 16, 2025 18:16

உனக்கு கழுதைதான்...கவலைப்படாதே protestor


Sundar R
ஜூன் 16, 2025 08:56

இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் மட்டுமல்லாது, ட்ராஃபிக் பிரச்சினையில்லாமல் குறைந்த பயண நேரத்தில், பாதுகாப்பாக அதிக அளவில் பக்தர்கள் மதுரைக்கு வந்து சேர்வதற்கு, சென்னையிலிருந்து, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல் மார்க்கமாகவும், கர்நாடகாவில் சுப்ரமண்யா திருக்கோயில் மிகப்பிரசித்தம். அதனால், பெங்களூருவிலிருந்து ஹோசூர், தருமபுரி, சேலம், நாமக்கல் [திருப்பூரில் இருந்து வருபவர்கள் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து இந்த ரயிலைப் பிடிக்கலாம்], கரூர், திண்டுக்கல் மார்க்கமாகவும், கோவையிலிருந்து, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் மார்க்கமாகவும், கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் மார்க்கமாகவும் காட்பாடியிலிருந்து திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மார்க்கமாகவும் ரயில்களை ONWARD AND RETURN DIRECTION - ல் செல்லும்படி ஏற்பாடு செய்தால் அது லட்சக்கணக்கில் மதுரைக்கு வரும் பக்தர்களுக்கு ரயில்வே துறை செய்யும் மிகப்பெரிய உபகாரமாக இருக்கும். அதுமட்டுமின்றி , பக்தர்கள் கொடுக்கும் பயணச்சீட்டு கட்டணங்கள் மூலம், ரயில்வே துறைக்கும் இந்த ஏற்பாடு பெரிய அளவில் பொருளாதார லாபத்தைக் கொடுக்கும். RAILWAYS SHOULD TAKE THIS AS A CHALLENGE AND MAKE THIS HAPPEN.


சமீபத்திய செய்தி