உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகன் கோவில் கும்பாபிஷேகம்: செல்வப்பெருந்தகையால் சர்ச்சை

முருகன் கோவில் கும்பாபிஷேகம்: செல்வப்பெருந்தகையால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தன்னை தடுத்து நிறுத்தியதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள, வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் நடந்தது. அதில், தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை பங்கேற்றார். கும்பாபிஷேகம் முடிந்ததும் பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, ''வல்லக்கோட்டை முருகன் கோவில், நான் எம்.எல்.ஏ.,வாக உள்ள, ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்குள் உள்ளது.''ஆனாலும், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என்னை தடுத்து நிறுத்தினர். மக்களோடு மக்களாக நின்று கும்பாபிஷேகத்தை பார்த்தேன். கடந்த 2,000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னையை, ஒரே நாளில் தீர்த்து விட முடியாது,'' என்றார். இதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்: வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில், தான் புறக்கணிக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை பொய் பேசியுள்ளார். கோவிலில் தீண்டாமை இருக்கிறது என, பொறுப்பற்ற முறையில் பேசி, சமூக பதற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளார். அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி கும்பாபிஷேகத்தின்போதும் கோபுர விமானங்களில், புனித நீர் ஊற்றும்போதும், அரசியல்வாதிகளை அனுமதிக்கக் கூடாது.தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி: வல்லக்கோட்டை கும்பாபிஷேக விழாவுக்கு தாமதமாக சென்ற நிலையிலும், செல்வப் பெருந்தகையை, மூலவர் விமான கலசம் அருகே நிற்க வைத்துள்ளனர். ஆனாலும், பொய் சொல்வது, உள்நோக்கம் கொண்டது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.இதற்கிடையில், செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: நேற்று முன்தினம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், தி.மு.க.,வின் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் சேகர்பாபு, என்னை சந்தித்து கேட்டறிந்து, வருத்தம் தெரிவித்தார். நடந்த சம்பவம் குறித்து, உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். அதிகாரிகள் செய்த தவறுக்கு, அனைத்து தரப்பினரையும் சமமாக நடத்தும், முதல்வர் ஸ்டாலினின் நற்பெயருக்கும், அமைச்சர் சேகர்பாபுவுக்கும், எவ்வித களங்கமும் ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

சாமானியன்
ஜூலை 09, 2025 17:16

ஒரு லட்சம் ரூபாய் எந்த முருகன் கோவில் அல்லது பராமரிக்கப்படாத கோவிலுக்கு டொனேஷன் தாருங்கள். பரிவட்ட மரியாதை தரச்சொல்லி பரிந்துறை செய்கின்றேன். மாசா மாசம் ஊழலில் 50% உண்டியலில் போடலாம்.


theruvasagan
ஜூலை 09, 2025 15:33

பெரிய பதவிகளில் இருக்கும் சின்னத்தனமான மனிதர்கள். அவங்களுக்குத் எப்போதும் சில்லறைத்தனமான புத்தி. சுயமரியாதையற்ற தாழ்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களால்தான் இவர்கள் சார்ந்த சமூகம் முன்னுக்கு வர முடியாமல் தடுக்கப்படுகிறது. அடிமை புத்தி கொண்டவன் எப்படி தன் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.


Selvaraj Thiroomal
ஜூலை 10, 2025 13:14

உங்கள் சிந்தனையின் ஓட்டத்தை திரும்பி பாருங்கள். பிறப்பின் அடிப்படையில் ஒருவரை எந்தளவிற்கு தாழ்த்தி நினைக்கிறீர்கள் என கவனியுங்கள். அரசியல் வேறு, உங்கள் கருத்து சக மனிதரை, உங்களை போன்றோர் எடைபோட்டு வைத்துள்ள அவலத்தை காட்டுகிறது. யார் திருந்த வேண்டும்?


Suresh Sivakumar
ஜூலை 09, 2025 14:08

All politicians should be restricted from attending temple.related festivials. That way no question of respect or disrespect. Keep.themnat a distance always


Muralidharan raghavan
ஜூலை 09, 2025 14:26

correct


lana
ஜூலை 09, 2025 14:03

ராமசாமி என்ற பெயர் குருமா க்கே பிடிக்க வில்லை. அப்புறம் மக்களுக்கு எப்படி பிடிக்கும்.


lana
ஜூலை 09, 2025 14:03

ராமசாமி என்ற பெயர் குருமா க்கே பிடிக்க வில்லை. அப்புறம் மக்களுக்கு எப்படி பிடிக்கும்.


Bhaskaran
ஜூலை 09, 2025 13:50

பக்த சிகாமணியை நேராக கோபுரத்தின் உச்சியில் அனுமதிக்காது மாபெரும் தவறு முருகன் கோவிச்சுக்க போகிறார்


Nagarajan D
ஜூலை 09, 2025 13:17

உனக்கு எதுக்கு மரியாதை? உன் வீட்டிலேயே உனக்கு மரியாதை இல்லை.. இதுவரை எத்தனை கட்சியிலிருந்து எங்கேயாவது உனக்கு மரியாதை கிடைச்சிருக்கா? கோவிலில் உனக்கு என்ன வேண்டிகெடக்கு? உன் கம்பெனி முதலாளியை போலவே நீயும் ஒரு விளங்காதவன்


Muralidharan S
ஜூலை 09, 2025 12:20

எல்லோரும் ஒரு நாள் ஒரு பிடி சாம்பல் அல்லது மண்ணுக்குள் மண்ணோடு மண்ணாய் போகப்போகிறோம்.மரியாதை எதிர்பார்ப்பு - அதுவும் கடவுளுக்கு மட்டுமே மரியாதையை செய்யப்படவேண்டிய கோவிலில் மரியாதை எதிர்பார்ப்பது இது எல்லாம் ஆணவம் அகம்பாவம் - இவற்றின் உச்சநிலை .. அது யாராக இருந்தாலும்... அதே போல, கோவிலில் கடவுளுக்கு மட்டுமே சேவை மற்றும் தொண்டு புரிய உள்ள அர்ச்சகர்கள் கடவுளை விடுத்து, மனிதர்களுக்கு - அது எந்த மனிதனாக இருந்தாலும் - கோவிலில் ராஜ மரியாதை செய்வது.. சிறப்பு தரிசனம் செய்வித்து வணங்குவது எல்லாம் அவர்களின் பாவ கர்மாவில் சேர்ந்துகொள்ளும். எல்லோரும் ஒரு நாள் அனுபவிக்க வேண்டி இருக்கும்.


நாஞ்சில் நாடோடி
ஜூலை 09, 2025 11:43

இந்து கடவுளை கிண்டல் கேலி செய்யும் இவர்களை போன்றோருக்கு இந்து கோயிலில் என்ன வேலை? பிரச்சினையை உருவாக்குவதற்கே இந்து கோயிலுக்கு செல்கின்றனர்.


Madras Madra
ஜூலை 09, 2025 10:39

ஓட்டுக்காக தன்னை தானே தாழ்த்திக் கொள்பவர்கள் அதிகம் ஆகி விட்டனர் ஜனநாயகம் நோய் ஆகும் ஒரு நாள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை