வேங்கைவயல் பிரச்னை ரொம்ப பழசு கண்டுபிடித்து அறிவித்தார் முத்தரசன்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கலந்துக்கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் அளித்த பேட்டி: அதானி ஊழல் நிறைந்த மோசடி பேர்வழி என்பது நாடறிந்த உண்மை. மத்திய அரசு நேர்மையான அரசாக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், மத்திய பா.ஜ., அரசு, அதானியை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யவில்லை. புயலால் பாதிக்கப்படும் போது, ஆயிரம், 2 ஆயிரம் வழங்குவது, அவர்களது பிரச்சனைக்குத் தீர்வாகது. தமிழக அரசு நிரந்தர தீர்வு காண, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். வேங்கைவயல் பிரச்னை ரொம்ப பழசு. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேற்கொண்டு பேச எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.