உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கொடி கட்டிய கார்களில் பெண்களை துரத்திய வாலிபர்கள்; வைரல் ஆகும் பகீர் வீடியோ!

தி.மு.க., கொடி கட்டிய கார்களில் பெண்களை துரத்திய வாலிபர்கள்; வைரல் ஆகும் பகீர் வீடியோ!

சென்னை: சென்னை அருகே இரவு நேரத்தில் காரில் வந்த பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய 2 கார்களில் துரத்தி வந்து வாலிபர்கள் மிரட்டிய வீடியோ காட்சிகள் பகீர் கிளப்பி உள்ளன.இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u7snc79m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை அடுத்த, முட்டுக்காடு பாலம் அருகே இரவு நேரத்தில் கார் ஒன்றில் சில பெண்கள் பயணித்துள்ளனர். அப்போது அவர்களின் காரை, 2 கார்களில் வந்த வாலிபர்கள் சிலர் கண்டுள்ளனர். அதில் ஒரு காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டு இருந்திருக்கிறது. பெண்களை கேலி செய்த அந்த வாலிபர்கள், ஒரு கட்டத்தில் அவர்கள் வந்த காரை துரத்தி இருக்கின்றனர். இதைக்கண்ட பெண்கள் அச்சத்தில் உறைந்து போயினர். என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் பயந்து போய், பீதியில் அலறிய பெண்கள் தாங்கள் வந்த காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். பின்னால் 2 கார்களில் இருந்து அதி வேகத்தில் துரத்திக் கொண்டு வந்த வாலிபர்கள், முந்திச்சென்று சாலையின் நடுவழியில் மறித்துள்ளனர். காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்த போதும், விடாமல் துரத்தி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பயந்து போய் பெண்கள் காரை நிறுத்த, அவர்களை நோக்கி வேகமாக வந்த வாலிபர்கள் கார் கண்ணாடியை ஆவேசமாக தட்டி ஏதோ கூறி மிரட்டி இருக்கின்றனர். நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெண்களில் ஒருவர், தமது செல்போனில் நடந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அவர்கள் பயத்தில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்யும்படி கூறும் உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.இந்த வீடியோ இணையதளங்களில் வெகு வேகமாக பரவ, பெண்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்து உள்ளன. பாதிக்கப்பட்ட பெண் கானாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்ட அவர், வாலிபர்கள் வந்த 2 கார்களில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு காரில் கட்சிக் கொடி ஒன்று கட்டப்பட்டு இருந்தததையும், தங்களை மிரட்டிச் சென்றதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். மிரட்டியதோடு இல்லாமல் தங்களின் வீடு வரை பின்தொடர்ந்து வந்து பயமுறுத்தியதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.இந்த சம்பவம் ஜன.25ம் தேதி இரவு நடந்துள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புகார் மனு, வீடியோ காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் 8 பேர் கொண்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குறிப்பிட்ட இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும், போலீசாரையும், அரசையும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

Sampath Kumar
பிப் 02, 2025 16:47

நல்ல ரீல் AI வளர்ந்து விட்ட நிலையில் இது போன்று விடீயோக்கள் இன்னும் சிறப்பாக வரும் விட்ட முதல்வர் கரு பேனை துரத்துது பாரு என்றாலும் ஆச்சரிய பட தேவை இல்லை


Pandi Muni
ஜன 30, 2025 18:50

ஜெயலலிதா இல்லாமல் அவரது ஆட்சி இல்லாமல் போனதை இப்போது உணர முடிகிறது


D.Ambujavalli
ஜன 30, 2025 05:57

அப்பாடா இந்த நிகழ்வு இன்னும் 2, 3. வாரத்துக்கு சூடாகப் பேசப்படும் ‘சார் யார்’? வேங்கைவயல் எல்லாம் அமைதியாகிவிடும் இதே போல், ஒன்றை ஒன்று தூக்கிச் சாப்பிடும் நிகழ்வுகளால் மக்களும் மறதியால் அப்படியே கடந்து போய்விடுவார்கள் இதுதான் நல்லாட்சி


சிந்தனை
ஜன 30, 2025 00:02

திருடர் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியின் முக்கிய தூண்களே குற்றவாளிகள் தான்


தமிழ்வேள்
ஜன 29, 2025 19:58

இதே ஜெயலலிதா ஆட்சியில் நடந்திருந்தால் அந்த கும்பலில் குறைந்த பட்சம் சில நபர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு மேலாக ஆகியிருக்கும்...திமுகவுக்கு தில்லு போதாது..... இந்த மாதிரியான நடவடிக்கைகளில் அம்மா ஆல்வேஸ் கிரேட்.. மறுக்க முடியாது...


Gokul Krishnan
ஜன 29, 2025 19:18

இது பற்றி எல்லாம் தி முக விற்கு ஜால்ரா சத்யராஜ் கரு பழனியப்பன் , ஜோதிகா , தூத்துக்குடி கனிமொழி , மீடியாக்கள் வாய் திறக்க மாட்டார்கள்


Thiyagu
ஜன 29, 2025 19:01

கேடுகெட்ட சமூகம் பணம் பார்த்து வாக்களிப்பதால் இவை அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டது


நாஞ்சில் நாடோடி
ஜன 29, 2025 17:29

பெண்களுக்கு இலவச பேருந்து கொடுத்துவிட்டு அவர்களுக்கு எதிராக ஆட்சி செய்யும் தி மு க.


தமிழன்
ஜன 29, 2025 17:01

தவறு நடந்தால் செட்டப் தவறு செய்தவர் மாட்டிக் கொண்டால் அனுதாபிகள் மாட்டிக் கொள்ளவில்லை என்றால் உறுப்பினர் தொடர்ந்து செய்பவர்கள் அமைச்சர்கள் ஆட்சியாளர் இது தானே அவர்கள் ஃபார்முலா என்று சொல்லும் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.. கொஞ்சம் பொறுமையாக இருங்கள் முகலாய வம்சத்தின் கடைசி அரசர் ஔரங்கசீப் என்பது போல நிகழ்வுகள் நடக்கும்.


வாய்மையே வெல்லும்
ஜன 29, 2025 16:50

ஐயா எனக்கு ஒரு பெரிய டவுட்டு.. கட்சி கொடிய பார்த்தா.. கருங் சிறுத்தை மாதிரி கீதே.. உங்ககண்ணுக்கு எப்படி.. அவங்களின் அடாவடி தாம் மூர்க்கனைவிட படுகேவலமாக இருக்கும் என்று ஊரே சொல்லி கேள்வி


சமீபத்திய செய்தி