மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்த பணிகள்; பழனிசாமி அறிவுறுத்தல்
29-Oct-2025
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான்கரை ஆண்டுகளில், பெண்கள் மீதான வன்முறை, 65 சதவீதம் அதிகரித்துள்ளது. மது மற்றும் போதைப் பொருட்களே இதற்கு காரணம். தற்போதும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என தி.மு.க.,வினர், சொல்வது ஆச்சரியமாக உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வாக்காளருக்கும், தேர்தல் நேரங்களில் தி.மு.க., பணப்பட்டுவாடா செய்கிறது. அதனால்தான், சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை கண்டு, தி.மு.க., பயப்படுகிறது. தேர்தலில் வெளிப்படை தன்மைக்காகவே, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி நடக்கிறது. என் அரசியல் பயணத்தில், எனக்கு ஆசிரியர் கருணாநிதி தான். யாரையும் மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என அவர் அறிவுறுத்தினார். அப்படிப்பட்ட தலைவர் வழி நடத்திய தி.மு.க.,வில், தற்போது அநாகரிகமாக பலர் பேசுகின்றனர். - குஷ்பு துணை தலைவர், தமிழக பா.ஜ.,
29-Oct-2025