உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை: சீமான் கண்டனம்

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை: சீமான் கண்டனம்

மதுரை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணை செயலாளர் ஆக பாலசுப்ரமணியன் இருந்து வந்தார். இவர் இன்று காலை சொக்கிகுளம் அருகே வல்லபாய் சாலை பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். அமைச்சர் தியாகராஜனின் வீட்டருகே கொலை நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kc9g1xiq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

போராட்டம் வெடிக்கும் என்கிறார் சீமான்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியனை படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்கும்.ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் பாலசுப்பிரமணியனின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது?. அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழகமா? இல்லை. உத்திரப்பிரதேசமா? எங்குப் பார்த்தாலும் வன்முறைத்தாக்குதல்கள், கொலைகள், போதைப்பொருட்களின் புழக்கம், ரவுடிகளின் அட்டூழியம், கூலிப்படைக் கலாசாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழகத்தின் நிலை மோசமாக இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

raghavan parthasarathy
ஜூலை 29, 2024 19:26

கொலைகள் முன் விரோதத்தால் நிகழ்கின்றன கொலைகள் நடந்து உடன் விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுகிறார்கள் வழக்கு மட்டும் நடந்து கொண்டே இருக்கிறது இந்த இருதரப்பாரின் செயல்களால் நாட்டில் அமைதி தொலைந்து அச்ச உணர்வு பரவுகிறது தங்களுக்கு இடைய உள்ள கையை சம்மந்தப்பட்ட நபரின் உயிரை பறிப்பதன் மூலம் தீர்த்து கொள்ளலாம் என்று நினைப்பது அறிவீனம். ஆனால் இதுவும் பலருக்கு வருவாய் தரும்ஒரு தொழிலாக போய்விட்டது. பொதுஜனங்கள் எல்லா கொடுமைகளையும் சகித்து கொண்டு வாழ பழகிக் கொண்டு வருக்கிறார்கள்...


M Ramachandran
ஜூலை 25, 2024 19:30

தூங்கா நகரம் கொலைகார நகரமாக மாறிக்கொண்டு வருகிறது. ஸ்டாலின் ஐயா சொல்கிறமாதிரி விடியல் பிறந்து விட்டது. வாழ்க தமிழகம் ?????


Matt P
ஜூலை 19, 2024 03:03

அரசியல்வாதிகள் கொலைகளை பார்க்கும்போது அரசியல் நற்பணிக்கு ஆள்களே கிடைக்காமல் போய்விடுவார்களா என்ற பயம், ஏற்படுகிறது. காந்திக்காலத்திலே முதல் கொலை ஆரம்பமாகி முடிவி ல்லாமல் தொடர்கிறது. எதையும் தாங்கும் இதய குடும்பம் ஓன்று தான் அரசியலுக்கு தகுதி மாதிரி தெரிகிறது .


Anand
ஜூலை 16, 2024 17:57

மிஸ்டர் சீமான், உன்னோட கட்சிக்காரன் கொலைசெய்யப்பட்டதற்கு இந்த மாநில அரசை கேளும், போராட்டம் நடத்தும், தேவையில்லாமல் இதில் எதுக்கு உத்தரப்பிரதேசத்தை இழுக்கிறாய்? அப்புறம் திமுகாவிற்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? நீயெல்லாம் திருந்தவே மாட்டாய?


Duruvesan
ஜூலை 16, 2024 15:45

இவன் போயி உத்தர பிரதேசத்தில் பார்த்திட்டு வந்தாரா


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 16, 2024 13:49

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை/ மரணத்தை ஆம்ஸ்டராங் கொலையில் மறந்தது போல, திருவேங்கடம் என்கவுன்டரில் ஆம்ஸ்டராங் கொலையை மறந்தது போல, மதுரை நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலையில் திருவேங்கடம் என்கவுன்டரை உடனடியாக மறந்துவிடும்படி பொதுமக்களை விடியல் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மறக்க முடியாதவர்கள் சில தினங்கள் பொறுத்துக்கொள்ளவும்.


sridhar
ஜூலை 16, 2024 13:41

அந்த மாவட்ட காலெக்ட்ரை பக்கத்து மாவட்டத்துக்கு மாற்றியாச்சு , அந்த dsp ஐ அரை நாள் சஸ்பெண்ட் பண்ணியாச்சு , இதை விட ஒரு அரசு என்ன செய்யமுடியும்,


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 16, 2024 14:25

டி எஸ் பி யை சஸ்பெண்டு செய்யலையாம். அவரு மாவாட்டற செயலாளர் கிட்ட அரை நாள் சிறு விடுப்பு எடுத்துக்கிட்டு பர்மிஷன் வாங்கிக்கிட்டுத்தான் போனாராம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 13:30

ஒரு சர்க்கஸ் பபூன் அரசன் ஆகிவிட்டால் அவனால் நிர்வாகம் செய்ய முடியாது ..... மாறாக அரசவை சர்க்கஸ் கூடாரம் ஆகிவிடும் ...


SUBBU,MADURAI
ஜூலை 16, 2024 13:21

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி படுகொலை, கடலூர் அதிமுக நிர்வாகி படுகொலை, சேலம் அதிமுக நிர்வாகி படுகொலை,பாமக நிர்வாகி மீது கொலை முயற்சி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரே படுகொலை, இப்ப நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி படுகொலை ஆகவே இந்த விடியல் திராவிடமாடல் திமுக ஆட்சி எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி!


MADHAVAN
ஜூலை 16, 2024 13:10

இப்போ செத்துபோனவன் கொலைக்குற்றவாளி, இவன்மேல 3 கொலைக்கேசு இருக்கு, இவன் பெயரில் பல ஆட்கடத்தல் கேசு இருக்கு, படத்தில கொலைகாரனை கொன்றால் கைதட்டும் உங்களுக்கு, உண்மைல நடந்தா கசக்குதா, இவன் என்ன பெரிய தியகியா ? கொலைகாரன், இவனகொன்னது இவன்கட்சி ஆளுங்கன்னு முதற்கட்டவிசாரணில தெரிஞ்சுஇருக்கு,


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை