வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Yes please stop this movie, it’s not acceptable to target any community
சென்னை,:'பள்ளி மாணவியரை தவறாக சித்தரிக்கும், 'பேட் கேர்ள்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்' என, முதல்வரிடம் தமிழ்நாடு நாடார் சங்கம் மனு கொடுத்துள்ளது.மனுவில் கூறியிருப்பதாவது:'பேட் கேர்ள்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், அப்படத்தின் இயக்குனர் வர்ஷா பரத் பேசிய போது, 'பெண்களை புனிதமாக்காதீர்கள். பெண் என்றால் பூ, பத்தினி, தெய்வம், தாய், தாய் என்றால் துாய்மை என கட்டமைத்து அடிமையாக வைத்துள்ளனர். ஆனால், உண்மை அதுவல்ல, அவர்களின் உணர்வை வெளிக்கொண்டு வருவதே, இத்திரைப்படத்தின் நோக்கம்' என்று பேசியுள்ளார்.இந்த படத்தின், 2:03 நிமிட டீசரில், சக பள்ளி தோழிகளுடன், 'செக்ஸ்' பேசுவது, மது அருந்துவது, உடலுறவு கொள்வது என ஒட்டுமொத்த இளம் தலைமுறை பள்ளி குழந்தைகளை கேவலமாக சித்தரித்திருப்பது, அனைத்து பெற்றோர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.தவறான பள்ளி மாணவியை, பிராமண சமுதாயத்தவர் போல காட்டி இருப்பது முற்றிலும் தவறு. இது, மாணவர்களுக்கு இடையே கிண்டல், கேலி மற்றும் ஜாதி ரீதியான பிரிவினைகளை ஏற்படுத்தும். அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில், பெண்களை தாயாக, தெய்வமாக மதித்து வாழும் தமிழகத்தில், இதுபோன்ற கலாசார பண்பாடுகளை சீரழிக்கும் திரைப்படங்களை வெளியிட அனுமதி வழங்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இதேபோல, 'பிராமண சமுதாயத்தின் உணர்வுகளை புண்படுத்தும், 'பேட் கேர்ள்' படத்தை திரையிட அனுமதிக்க கூடாது' என, தமிழ்நாடு பிராமண சங்கத் தலைவர் கோவை கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் ஆகியோரும் வலியுறுத்தி உள்ளனர்.
Yes please stop this movie, it’s not acceptable to target any community