நாராயணகுரு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு
கோவை: முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது. மதுக்கரையில் உள்ள நாராயணகுரு பாலிடெக்னிக் கல்லூரியில் 1995- 98ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடினர். ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். கல்லூரி நாட்களை தொடர்ந்து தற்போது வரை நடந்த அனுபவங்களை, பகிர்ந்து கொண்டனர். தங்கள் பேராசிரியர்கள் குருமூர்த்தி, ராஜேஸ்வரி, அமுதா, செந்தமிழ்செல்வி, கவிதா ஆகியோரையும் விழாவுக்கு அழைத்து கவுர வித்தனர்.