உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டைம்லெஸ் தமிழ்நாடு ஆவண படத்திற்கு தேசிய விருது

டைம்லெஸ் தமிழ்நாடு ஆவண படத்திற்கு தேசிய விருது

சென்னை:தமிழக சுற்றுலா துறை தயாரித்த, 'டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆவணப்படத்திற்கு, தேசிய விருது கிடைத்துள்ளது. தமிழகத்தை சுற்றுலா மாநிலமாக மேம்படுத்தும் வகையில், 2022ல், 'டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. 'செலிபிரிட்டி மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் இயக்குநர் காமக்யா நாராயண் சிங் தலைமையிலான குழுவினர், இதை தயாரித்தனர். சென்னை, மாமல்லபுரம், தஞ்சாவூர், நீலகிரி, திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, காரைக்குடி, ராமேஸ்வரம் போன்ற நகரங்களில் எடுக்கப்பட்டு, இந்த 30 நிமிட ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில், 71வது தேசிய திரைப்பட விருதுகளை, மத்திய அரசு அறிவித்தது. திரைப்படங்கள் அல்லாத பிரிவின் கீழ், சிறந்த கலை, பண்பாட்டிற்கான ஆவணப்படமாக, 'டைம்லெஸ் தமிழ்நாடு' தேர்வு செய்யப்பட்டு, 2023ம் ஆண்டிற்கான 'ராஜத்கமல்' விருது கிடைத்துள்ளது. இதையொட்டி, செலிபிரிட்டி மேலாண்மை நிறுவன முதன்மை செயல் அலுவலர் பிரசாந்த் சோட்டாணி, நிறுவனர் நிஷா சோட்டாணி, இயக்குநர் காமக்யா நாராயண் சிங் ஆகியோர், தலைமை செயலகத்தில் நேற்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ