உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை: தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை: தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பாலியல் வன்முறைக்கு உள்ளான மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், '' என தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை அண்ணா பல்கலை.,யில் படிக்கும் 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் பிறகு, இந்த வழக்கு குறித்த விவரம் இணையதளத்தில் வெளியானது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு அண்ணாமலை புகார் அளித்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cqzybcua&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. அதில், தமிழக டி.ஜி.பி.,க்கு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலையில் 19 வயது மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தை தேசிய பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்தகொடூரமான சம்பவத்திற்கு கமிஷன் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க துணையாக நிற்கும்.இதேபோன்ற குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் குற்றவாளி மீது முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்க தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டனர். இந்த அலட்சியத்தால் தான் குற்றவாளி அதேபோன்ற குற்றத்தைச் செய்யத் தூண்டியது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவது கவலை அளிக்கிறது.மேலும், *பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும்*கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் குற்றவாளி மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 71 ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.*உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Sudha
டிச 27, 2024 11:34

இனியொரு வன்செயல் நேரும் பட்சத்தில் அந்த மாநில ஆணையம் கூண்டோடு கலைக்கப்பட வேண்டும்


Sudha
டிச 27, 2024 11:23

தேசி மகளிர் ஆணையத்தின் மீது எப்போது நடவடிக்கை எடுப்பது? கொல்கத்தா வன்முறையில் இன்னும் எதுவும் நடக்கவில்லை பொள்ளாச்சி போயா போச்சி


பாரதி
டிச 27, 2024 10:46

அரசு ஊழியர்களின் குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுத்தால் தான் இந்த நாடு உருப்படும் கோர்ட்பதி முதல் அனைவருக்கும் இது பொருந்த வேண்டும் என்று தோன்றுகிறது.... இது சரியா என்பதை கோர்ட் கூற பணிவுடன் வேண்டுகிறேன்


சம்பா
டிச 27, 2024 06:12

ஒன்னும் பண்ண முடியாது தெரியாம யா வெளியிட்டு இருப்பான்


Rajarajan
டிச 27, 2024 04:24

அந்த சார் என்பவர் நிச்சயம் அரசியல்வாதி அல்லது பல்கலை உயர்பதவி ஆளாக தான் இருக்கமுடியும்.


aaruthirumalai
டிச 26, 2024 23:27

நடவடிக்கை என்றால்...?


Muthu Kumaran
டிச 27, 2024 06:28

ட்ரான்ஸபர், ப்ரோமொஷன் கொடுப்பது தான் கடும் நடவடிக்கை . இது தான் திராவிட மாடல் ஆட்சி


aaruthirumalai
டிச 27, 2024 14:38

தடவி கொடுப்பது.


குமரன்
டிச 26, 2024 22:51

அவனை பணியிடை நீக்கம் என்று இல்லாமல் பணி நீக்கம் என்பதே சரி இந்த பாவத்தையும் எங்கே கொண்டு தொலைப்பது


ஆரூர் ரங்
டிச 26, 2024 22:04

அரசியலில் தீவீரமா ஈடுபட்ட இரு அண்ணன்மார் இருக்கும் போது கத்துக்குட்டி விடியலை மிசால கைது செஞ்சது ஒரு மிஸ்சால. இப்பவும் ஆட்சிக்கே வேட்டு வைக்கப்போவது ஒரு மிஸ் தான்?


இராம தாசன்
டிச 26, 2024 21:40

புது கட்சி- தலைவர் விஜய் மணிப்பூர் பற்றி பேசினாரே இப்போ என்ன சொல்ல போகிறார்? இதை பற்றி வாய் திறப்பாரா


Barakat Ali
டிச 26, 2024 22:24

எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கத்துடன் தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களையே அவர் எதிர்த்து உடம்பை புண்ணாக்கிக் கொள்வாரா ????


sankaran
டிச 26, 2024 21:05

கனி அக்கா... எங்கே மெழுகு வர்த்தி... கவர்னர் மாளிகை வரைக்கும் நடை பயணம் போகலையா ?..