உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதுரகிரி மலையில் நவராத்திரி விழா : காப்புக்கட்டுடன் துவக்கம்

சதுரகிரி மலையில் நவராத்திரி விழா : காப்புக்கட்டுடன் துவக்கம்

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது. இங்குள்ள ஆனந்தவல்லியம்மனுக்கு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவையொட்டி, நேற்று அதிகாலையில் சுந்தர மகாலிங்க சுவாமி , சந்தன மகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதன்பின், அமாவாசை பூஜைகள் துவங்கின. வில்வ அர்ச்சனை, சங்கொலி பூஜைகளுக்கு பின், நவராத்திரிக்கான காப்புக்கட்டு நடந்தது. விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்புகளை கட்டிக்கொண்டனர். இதன்பின், ஆனந்த வல்லியம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள், பக்தசபையினர் ஊர்வலத்தில் காப்பு ஏந்தியபடி செல்ல, அம்மன் கோ யிலை வலம் வந்து, கொலுமண்டபத்தை அடைந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஜவஹர், தக்கார் செந்தில் வேலவன் செய்திருந்தனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை