உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவராத்திரி ஏழாம் நாள்

நவராத்திரி ஏழாம் நாள்

மதுரை மீனாட்சி அம்மன் இன்று எல்லாம் வல்ல சித்தர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.மன்னரான அபிேஷகப் பாண்டியனுக்கு முக்தி கொடுக்க எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார் சிவபெருமான். ஒருநாள் மதுரை சொக்கநாதரை தரிசிக்க வந்தார் மன்னர். அப்போது எதிர்பட்ட சித்தரிடம், ''தாங்கள் யார்? என்ன வேண்டும்'' எனக்கேட்டார். ''எனக்கு ஒன்றும் வேண்டாம். நீங்கள் கேளுங்கள். தருகிறேன்'' என்றார். அவரை சோதிக்க விரும்பிய மன்னர் ஒரு கரும்பைக் கொடுத்து, ''இதை இங்குள்ள கல் யானை உண்ணுமாறு செய்வீரா'' எனக்கேட்டார். சித்தர் அந்த யானையின் சிற்பத்தை பார்க்கவே, அது உயிர்பெற்று கரும்பை பிடிங்கி உண்டது. கூடவே மன்னரது முத்துமாலையையும் தின்றது. மெய்க்காவலர்கள் சித்தரை அடிக்க வந்தபோது சிலையாக மாறினர். தவறை உணர்ந்த மன்னர் மன்னிப்புக் கேட்டு, தனக்கு குழந்தை வரம் தருமாறும் வேண்டினார். அதன்படி சித்தர் வரம் அளித்து மறைந்தார். முத்துமாலையும் கிடைத்தது. பின்னாளில் மன்னர் முக்தியும் அடைந்தார். மீனாட்சி அம்மன் கோயிலில் எல்லாம் வல்ல சித்தருக்கு சன்னதி உள்ளது. பாட வேண்டிய பாடல்குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம் நின்குறிப்பறிந்துமறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டிவெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !