உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்ற சம்பவம்; சட்டம் - ஒழுங்கை சீர்கெடுக்கும் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்ற சம்பவம்; சட்டம் - ஒழுங்கை சீர்கெடுக்கும் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம்: ''திருப்பரங்குன்றத்திற்கு அப்துல் சமது, நவாஸ் கனி வந்தது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயல்,'' என,திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., சட்டசபை குழு தலை வர் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.இங்கு மலைமீதுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்ய நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று வந்தனர். பின், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: எம்.எல்.ஏ., அப்துல் சமது - எம்.பி., நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு செய்துள்ளனர். இது, பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நான் கூட இங்கே வந்திருக்க மாட்டேன். அவர்கள் வந்ததால், நாங்களும் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.பெற்றோர் நமக்கு கற்றுக்கொடுத்தது கடவுள் வழிபாடு. அதை விட்டுக் கொடுக்கவோ, மாற்றவோ முடியாது. மலை மேல் முன்னர் அசைவம் சமைத்தது கிடையாது. புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதற்கு முன் என்ன பழக்கம் இருந்ததோ அதை கடைப்பிடிப்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.அவர்கள் இது எங்கள் மலை, எங்களுக்கு சொந்தம். இப்பழக்கத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்பது, சட்டம் - ஒழுங்கை சீர்கெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.காடேஸ்வர சுப்ரமணியம் கூறுகையில், ''மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

AMLA ASOKAN
ஜன 25, 2025 21:23

நவாஸ் கனி தர்கா சென்று பிரியாணி சாப்பிட்டார் என்று அண்ணாமலையால் திரிக்கப்பட்ட கருத்து முற்றிலும் பொய்யானது . அவர் போலீஸ் உடன் 5 நிமிடம் விசாரித்து விட்டு சென்று விட்டார் . மேலும் அவர் எது உண்மை என்று நிரூபிக்க பட்டால் இருவரில் ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சவால் விட்டுள்ளார் . அண்ணாமலையிடமிருந்து இதுவரை பதில் இல்லை .


sundarsvpr
ஜன 25, 2025 15:27

இந்திய திருநாட்டில் ஹிந்து பௌத்தம் ஜைனம் சீக்கிய மதங்களின் கோட்பாடுகளின்படிதான் வழிபாட்டு முறை இருக்கவேண்டும். மற்ற மதங்கள் வந்தேறிகள். வந்தேறித்தனம் எப்படிப்பட்டது என்று நாம் மௌனம் காப்பது நம்முடைய பெருந்தன்மை. ஹிந்துக்கள் இனியும் சும்மா இருப்பது தங்களை தாங்களே மாய்த்துக்கொள்வதுபோல் . மத தலைவர்கள் மௌனமாய் இருப்பது மடத்து சொத்துக்களுக்கு ஆபத்து இருக்கும். எல்லா மடாதிபதிகளும் நாள்தோறும் வீதிக்கு வந்து குறைந்தது ஒரு மணிநேரம் மக்களுடன் விவாதியுங்கள். நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.


Bahurudeen Ali Ahamed
ஜன 25, 2025 11:55

நவாஸ்கனி திருப்பரங்குன்றம் வந்து ஏதாவது தவறாக பேசினாரா? மதக்கலவரத்தை தூண்டும்விதமாக ஏதாவது பேசி இருந்தால் ஆதாரத்தை வெளியிடுங்கள், அப்படி ஒன்று இருந்தால் நிச்சயம் கண்டிப்போம், எந்த ஆதாரமும் இல்லாமல் வெறுமனே பேசி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள், ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாய் சகோதரர்களாய் பழகுவது ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை, இதில் ஏதாவது செய்து சகோதரத்துவத்தை கெடுத்துவிடமுடியாதா என்று சிலர் முயற்சிக்கின்றனர் என்ன செய்ய இது தமிழ்நாடாக போய்விட்டது


AMLA ASOKAN
ஜன 25, 2025 09:34

எம்.எல்.ஏ., அப்துல் சமது - எம்.பி., நவாஸ்கனி இருவரும் திருப்பரங்குன்றம் மலையில் என்ன சச்சரவு என்பதை அறியவும் , அதற்கு தாங்கள் அரசியல் தலைவர்கள் என்ற அடிப்படையில் சமரச தீர்வுகானவும் தான் , ஒரு சிலருடன் அமைதியாக ஆய்வு செய்ய வந்தனர் . தர்காவை சென்று பார்வையிடவுமில்லை . அவர்கள் முஸ்லிம்களை முறுக்கேற்றி எதிர்வினை ஆற்றி ஊக்கப்படுத்தவும் இல்லை . கூட்டம் போட்டு எதுவும் எதிராக பேசவும் இல்லை . மாறாக மத வேற்றுமையை ஏற்படுத்தி , முஸ்லிம் வெறுப்பை உண்டாக்க இந்து தலைவர்கள் , இந்து அமைப்பினர் கூட்டமாக திரண்டு இதை பெரிதாக்க முயற்சிக்கின்றனர் . நைனார் நாகேந்திரன் மத நல்லிணர்த்திக்கான கருத்தாக " இதற்கு முன் என்ன பழக்கம் இருந்ததோ அதை கடைப்பிடிப்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை " என்று கூறியது தான் இப்பிரச்சினைக்கான தீர்வு . இதை தான் மதுரை மாவட்ட ஆட்சியரும் கூறியள்ளார் . எதற்கு இவ்வளவு வக்கிரமான விமர்சனங்கள் ?


Kasimani Baskaran
ஜன 25, 2025 08:03

திராவிட ஆதரவு பாஜகவினர் இப்படித்தான் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள். உறுதிமொழி எடுத்தவர் அதை மீறிவிட்டார் - ஆகவே பதவியை பறிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்று வழக்குதொடரவேண்டும்.


J.V. Iyer
ஜன 25, 2025 05:03

இதை சொன்ன எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் அவர்களை கைது செய்யாதது ஏவல்துறையின் பெருந்தன்மை என்றுதான் சொல்லவேண்டும். அடுத்தது நவாஸ் கனிக்கு திராவிடியா மாடல் அரசில் ஒரு பட்டம், பரிசு?


R. SUKUMAR CHEZHIAN
ஜன 25, 2025 04:54

ஹிந்துகளின் ஓட்டில் ஜெய்த நவாஸ் கனி தமிழ் கடவுள் முருகபெருமான் பக்தர்கள் மனசு புண்படும்படி மத கழ்புனர்சியோடு நடந்து கொண்டது கண்டிக்க தக்கது. அவரது நிறுவனமான S.T. COURIER இல் ஹிந்துகள் வடிகையாளர்கள்க உள்ளனர் ஹிந்துகளின் ஓட்டு மற்றும் வருமானம் மட்டும் வேண்டும் இவர் கோவில் பிரச்சனையில் தலையிட்டு முஸ்லிம்கள் தலைவராக கட்டிக்கொள்வது அப்பட்டமான தமிழ் எதிப்பு ஹிந்துகள் மீதான காழ்ப்புணர்ச்சி. சொரனை கெட்ட ஹிந்துகள் தான் திருந்த வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜன 25, 2025 04:23

மதத்தீவிரவாதிகள் ஆன வந்தேறிகள் மண்ணின் மக்களை நிம்மதியாக இருக்கவிடமாட்டாங்களா


ramuk robert khosa
ஜன 25, 2025 14:24

நல்லவேளை அப்பாடா நம்மையெல்லாம் உதைக்க வில்லையே அதுவரைக்கும் புண்ணியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை