உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 12 கேள்விகள்!

கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 12 கேள்விகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: பாஜவால் பார்லிமென்ட் எம்பிக்கள் கொண்டு அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவுடன் கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலும் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க இயலவில்லை. முழுமையாகக் கலந்துரையாடி, இந்தப் பிரச்சனையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகு, மனதில் எழுந்த கேள்விகளை முதல்வர் ஸ்டாலினுக்கு முன்வைக்க விரும்புகிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gzuezr18&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=01. முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்?2. விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறினர். இவற்றைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்ன?3. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா விமான சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 லாக்அப் மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூரில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்துவது ஏன்?4. திமுகவினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால் சந்தேகமடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். கூட்ட நெரிசலுக்குப் பிறகு, உண்மையை மறைக்க திமுக அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் செயல்பட்டது ஏன்?5. 25 பேர் மீது வழக்கு பதிந்து, பத்திரிகையாளர் பெலிக்ஸ் உட்பட நான்கு பேரைக் கைது செய்து, மக்கள் மத்தியில் எழும் அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாகத் திமுக அரசு முடக்குகிறது?6. 10,000 பேர் தான் கூடுவர் என்று தவறாக கணித்ததாக விஜய் மீது குற்றம் சாட்டும் திமுக அரசின் போலீசார், கூட்டத்தைச் சரியாக மதிப்பிடாதது ஏன்?7. விஜய் தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?8. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட போலீசார்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பது உறுதி. உண்மையிலேயே எத்தனை பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்? பெரும் அரசியல் பேரணி நடக்கும் வேளையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரூரில் இல்லாதது ஏன்?9. இவ்வளவு குறைபாடுகள் அரசுத் தரப்பில் உள்ளன என்பது நிரூபணமான பின்பும், ஏன் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இதில் ஏதேனும் உண்மைகள் புதைந்திருந்தால் அவை அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சமா?10. அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே, திமுகவின் சட்டம் ஒழுங்கு தோல்வியை மறைக்கும் விதமான கருத்துகளை விசாரணை ஆணையத் தலைவர் வெளியிடுவது ஏன்?11. விசாரணை நடைபெறும் நிலையில் அது குறித்து பொது அறிக்கைகளை வெளியிட வருவாய் செயலாளருக்கு அதிகாரம் அளித்தது யார்? இது விசாரணையின் நடுநிலைத்தன்மையை சமரசம் செய்யாதா? திறமைமிக்க அரசு அதிகாரிகளைத் திமுகவின் கைப்பாவைகளைப் போல பயன்படுத்துவது சரியா?12. அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு, கரூர் வழக்கை ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?திமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடரே இத்துயரம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகத் தெரிகிறது. எனவே தான், ஒரு நபர் ஆணையத்தின் மீது எந்த நம்பிக்கையுமின்றி சிபிஐ விசாரணை வேண்டுமெனக் கோருகிறோம். கோரிக்கையைப் பரீசீலிப்பதோடு, தமிழக மக்கள் சார்பாக நான் முன்வைத்த கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

joe
அக் 01, 2025 20:01

திருச்செங்கோட்டில் விஜய்க்கு எதிராக போஸ்டரை ஒட்டியவர்கள் என்று இதன் பட்டியல் நீளுகிறது .இதையெல்லாம் காவல் துறை பரிசோதிக்கவும் . CCTV கேமராக்களை பரிசோதிக்கவும் .


என்றும் இந்தியன்
அக் 01, 2025 18:50

முதல்வர் ஸ்டாலின் அவர்களே இன்னொரு அரசியல் கட்சி கூட்டம் நடத்தி இவ்வளவு மக்கள் கூட்டம் வந்தால் உங்களுக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகின்றது??? உங்களது கடமை மக்களை காப்பது அவர்கள் யாருக்கு ஒட்டு போட்டாலும்???அந்த ஒரு எண்ணம் இல்லாமல் மக்கள் காவல் துறையை அந்த இடத்திற்கு 500 பேர் வேண்டுமென்றால் வெறும் 50 பேரை அனுப்பி இது என்ன நாடகம்???நீ தமிழகத்தின் முதல்வரா இல்லை திமுகவின் முதல்வரா???மக்களை காப்பது தான் முதல்வரின் தலையாய கடமை


ராஜா
அக் 01, 2025 18:46

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனங்கள் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை,அந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யவும்


VENKATASUBRAMANIAN
அக் 01, 2025 18:04

இதற்கு ஸ்டாலின் பதில் உடனே சொல்லி பாஜக வாயை மூட வேண்டும். செய்வாரா.


பேசும் தமிழன்
அக் 01, 2025 19:38

பதில் இருந்தால் தானே சொல்ல !!!


Ms Mahadevan Mahadevan
அக் 01, 2025 17:43

எல்லா கட்சிகளும் கரூர் சம்பவத்தை அரசியல் ஆதாயம் பெற போட்டி போடுவது தெரிகிறது


Tirunelveliகாரன்
அக் 01, 2025 17:15

தமிழ்நாட்டு மக்களை ஏதோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.இது எல்லாமே உங்களுக்கு பாதகமாக தான் அமையும். தமிழ் நாட்டு மக்கள் சினிமா மோகம் கொண்டவர்கள் தான் அதற்காக நீங்கள் கட்டும் கதையை எல்லாம் ஒருக்காலும் நம்பமாட்டார்கள்


Srprd
அக் 01, 2025 17:02

It's a shame that a very senior IAS officer is giving an explanation to bail out the Govt. and blame the organizers.


Field Marshal
அக் 01, 2025 16:26

எண்ணூரில் எந்த முந்திரியும் உண்டியல் குலுக்கன்ஸ் களும் போகாதது வருத்தமளிக்கும் செயல் ..தமிழகத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பில் வடமாநில இளைஞர்கள் ஒன்பது பேர் விபத்தில் உயிரிழந்தார்கள் ..பலர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்


Mariadoss E
அக் 01, 2025 16:12

எந்தக் கேள்வியும் பதில் தரவேண்டிய அவசியம் இல்லாத அரசியல் கேள்விகள். பொறுப்பற்ற, விளம்பர ப்ரியன் விஜயின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையால் வந்தது இவ்வளவு இறப்புகள். செஞ்ச தப்ப ஒத்துக்க தைரியம் இல்லாதவனுக்கு ஒத்து ஊதி அரசியல் செய்யும் பிஜேபி, அதிமுக, தவெக......


Haja Kuthubdeen
அக் 01, 2025 16:08

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் எடப்பாடியா இருந்தாலும் மோடியா இருந்தாலும் அனுமதி இல்லையோ என்னவோ....