உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சம கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு கோர்ட் சம்மட்டி அடி; நயினார் நாகேந்திரன்

சம கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு கோர்ட் சம்மட்டி அடி; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சம கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில், 'தமிழக மாணவர்களை அழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள்; உங்கள் மொழிப் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இது தொடர்பான செய்தி இன்று (டிச.,16) நமது நாளிதழில் வெளியாகி இருந்தது. இந்த செய்தியை மேற்கொள் காட்டி, நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சம கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச உண்டு உறைவிட வசதியுடன் தரமான கல்வியை நல்கும் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தனது அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழகத்தில் வரவிடாமல் தடுக்கும் திமுக அரசைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளது உச்ச நீதிமன்றம். நாடு முழுவதும் உள்ள 650 நவோதயா பள்ளிகள் மூலம் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில், பெயருக்கு மொழியைக் காரணம் காட்டி மறுத்து, தமிழக கிராமப்புற மாணவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது முறையானதல்ல எனச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் பல பள்ளிகள் இருக்கிறதென்றால், கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கான பள்ளியும் இருந்தால் என்ன தவறு என்று சுருக்கென்று கேட்டதோடு, பள்ளிகள் பெருகும் போது தான் முன்னேறும் வாய்ப்புகளும் பெருகும் எனச் சுட்டிக்காட்டி திமுக அரசைத் தலையில் நறுக்கென்று குட்டு வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க மாவட்டந்தோறும் நவோதயா பள்ளி அமைப்பதற்காக நிலத்தை திமுக அரசு கண்டறிய வேண்டும்.திமுக அரசு ஒருவேளை இந்த நீதிமன்ற உத்தரவையும் வழக்கம்போல் அவமதித்தாலும் பிரச்னையில்லை, அடுத்து அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியால் தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளைத் தொடங்கி, தமிழகத்தின் கல்வித் தரத்தை முன்னேற்றி, மாணவர்கள் சிறந்து விளங்கச் செய்யப்படும். இது உறுதி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தினமலர் செய்தி

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மேற்கொள் காட்டிய நம் நாளிதழில் வெளியான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Venugopal S
டிச 16, 2025 21:39

நவோதயா பள்ளிகளில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு என்ன வசதிகள் உண்டோ அதைவிட அதிகமாக தமிழக அரசு பள்ளிகளில் கிடைக்கிறது. அப்புறம் எதற்கு தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்? ஏற்கனவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சேர்க்கை குறைவு.அதற்குக் காரணம் தனியார் சி பி எஸ் இ பள்ளிகளின் தரம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை விட நன்றாக இருப்பது தான். அதே நிலை தான் நவோதயா பள்ளிகளுக்கும் ஏற்படும்!


Priyan Vadanad
டிச 16, 2025 15:50

யாருக்காக இந்த பள்ளிகள்? இது சமுதாய விளிம்பில் வாழும் மக்களின் குழந்தைகளுக்காகவா? அல்லது இந்தியாளர்களுக்காகவா? y


vivek
டிச 16, 2025 16:55

சமுதாய விளிம்பில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல சத்துணவு போட வக்கில்லாத அரசு..


Barakat Ali
டிச 16, 2025 15:38

என் உணவு ..... என் உரிமை ..... என் உணவை பாஜக தீர்மானிப்பதா ???? இப்படியெல்லாம் கேட்டவனுங்க மக்களோ, மாணவர்களோ மும்மொழிக்கொள்கையை விரும்பலாமே .... அதை எதிர்க்க திமுக யாரு ன்னு கேட்கலையே ????


Barakat Ali
டிச 16, 2025 15:29

ஹிந்தி வேணாம் போ - ன்னு சொல்ற டுமீலன் குடும்ப ஆட்சி வேணாம் போ - ன்னு சொல்லுவானா ????


ஆரூர் ரங்
டிச 16, 2025 15:20

மொழிய வெச்சு அரசியல் செய்யாமல் அவியலா செய்வாங்க? பெரும்பான்மை மதத்தை வைத்ததுதான் அரசியல் செய்யக்கூடாது. (சிறுபான்மை மத வாக்குவங்கிக்காக அரசியல் செய்வது மட்டும் தவறில்லை)


RAMAKRISHNAN NATESAN
டிச 16, 2025 15:11

சனங்க மும்மொழியை விரும்புனா நாங்க படிக்க உட்ருவோமா ? அப்புறம் எங்க ஆளுங்க கல்வி பிசினஸ் எண்ணத்துக்காவுறது ?


Krishnamoorthy
டிச 16, 2025 14:46

மத்தியில் ஆளும் பிஜேபிக்கு சம்மட்டி அடி கொடுக்கப்படும் அதே கோர்ட் மூலம்.


sundarsvpr
டிச 16, 2025 13:40

ஹிந்தி படிப்பதால் தமிழின் வளர்ச்சி குன்றிவிடும் என்றால் வளர்ச்சி குன்றும் மொழி ஏன் தேவை? ஸ்டாலின் என்ற பெயருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்,? ஸ்டாலின் தகப்பனார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் போல் புகழ் பெறவேண்டும் என்ற ஆசையில் பெயர் சூட்டிருக்கலாம். இது தவறா சரியா ஸ்டாலின் குடும்பம்தான் கூறவேண்டும், ரஷ்யா அதிபர் பெயர் இப்போது பொது மக்கள் நினைவில் இல்லை.


திகழ்ஓவியன்
டிச 16, 2025 13:21

மிகப்பெரிய சாதனை படைக்க போகும் தமிழ்நாடு.. 100% இலக்கை அடையும் மாநிலம்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..


Modisha
டிச 16, 2025 14:35

ஒரு ஓரமா போய் உளறு.


பாலாஜி
டிச 16, 2025 13:08

பாஜக சொல்வதை பல நீதிமன்றங்கள் நீதிபதிகள் நிறைவேற்றுவது வழக்கமாகி விட்டது நயினார் நாகேந்திரன்.


vivek
டிச 16, 2025 15:09

ஆமாம் பாலாஜி.. விலை போகாத நீதிபதிகளும் உண்டு என்று உன் அறிவுக்கு இப்போது எட்டியது


புதிய வீடியோ