உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோமாஸ்கந்தர் சிலையை மீட்பதில் அலட்சியம்!: பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு

சோமாஸ்கந்தர் சிலையை மீட்பதில் அலட்சியம்!: பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சோமாஸ்கந்தர் சிலையை கண்டுபிடித்து விட்டதாக கூறும் விவகாரத்தில், பொய் தகவல் பரப்பப்படுவதாக, ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறினார்.அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருப்பதை நான், 2018ல் கண்டுபிடித்து, நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்துள்ளேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், நான் கண்டுபிடித்து தெரிவித்த சிலையை மீட்பதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலட்சியமாக செயல்படுகிறது.இதேபோன்று, தஞ்சை மாவட்டம் தீபங்குடியில் சமணர் சிலையை திருடியது யார், எங்கே உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்களையும் தெரிவித்துள்ளேன். அந்த சிலையையும் மீட்காமல் உள்ளனர்.தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிலைகள் குறித்து வழக்கு கூட பதிவு செய்யாமல் உள்ளனர். சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் மகள் மம்தா, சகோதரி சுஷ்மா ஷெரின், நீல்பெரி ஸ்மித் மற்றும் சிங்கப்பூரில் உள்ள பரமேஸ்வரி பொன்னுச்சாமி ஆகியோரை பிடித்தால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைளை மீட்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Lion Drsekar
அக் 03, 2024 13:53

எங்கும் எதையும் யாராலும் எதுவுமே செய்யமுடியாது, வந்தே மாதரத்துக்குப் பதிலாக ஹிரண்யாய நமஹ என்பதில் எந்த ஒரு குற்றமும் இல்லை, ஹிரண்யன் காலங்களில் இறைவனின் பெயரை உச்சரிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றி சொல்லாதவர்களை துப்புறுத்தினான் தான் ஏற்ற மகனே தந்தையின் பெயரை உச்சரிக்க மறுத்ததால் பெற்ற தாயைவைத்தே கொலை செய்ய முயற்சி செய்தான் என்பது புராணகாலத்திய கதை, வருங்காலங்களில் உலகம் உச்சரிக்கவேண்டியதை இப்போதிலிருந்து நாமும் உச்சரித்தால் நமக்கும் நல்லது நாட்டுக்கும் குடும்பத்துக்கு நல்லது எனவே உலகத்தின் நன்மை கருதி வருங்கால ஸ்லோகன் பதிவு செய்ததில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது, யாருக்கும் நாட்டமில்லை, அதே போன்றுதான் இவரது கருத்துக்களும், எல்லாமே விழலுக்கு இறைத்த நீர், உங்கள் குடும்பத்தைப்பார்த்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்வதே சிறந்தது, போதும் பொருநலத்தொண்டும் கருத்துக்களும், அன்புடன் நிரந்தரமாக விடைபெறும் ஹிரண்யாய நமஹ


ko ra
அக் 03, 2024 09:56

இவர் நோக்கம் புனிதம். இவருக்கு எடப்பாடி அரசு கொடுத்த குடைச்சல் தி மு க விற்கு சற்றும் குறைந்ததில்லை. இவரை போய் விளம்பர பிரியர் என்று சொல்வது சிவனுக்கே பொருக்காது. ஒத்துழைப்பு அல்லது பாராட்டு வேண்டாம் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம்.


raja
அக் 03, 2024 09:34

சிலையை மட்டும் அல்லாமல் கோயிலையே ஆட்டையை பொடும் கடத்தும் திருட்டு ஒன்கொள் திராவிட கூட்டத்திடம் போய் மீட்க சொன்னால் எப்படி ....


அஸ்வின்
அக் 03, 2024 08:55

நீ வேற கிச்ச சிச்சு மூட்டிட்டு


பாமரன்
அக் 03, 2024 08:20

அந்த சிலையின் எப்படி கோவிலை விட்டு வெளியே மற்றும் நாட்டை விட்டு வெளியே சென்றதுன்னு கேட்டாலோ... அல்லது ஏரியா பிக் பாக்கெட் அடிக்கிறவன் பற்றி அந்த ஏரியா ஏட்டு புட்டு புட்டு வைப்பாரு... ஆனா புடிச்சு உள்ள போட மாட்டாரு... அந்த மாதிரி சிலை கடத்தல் யாரு செஞ்சான்னு ... அதாவது எங்க ஜி மாதிரி... சொல்றது பற்றியோ யாரும் கேட்டுப்புடாதீங்கோ... டீம்காகாரவான்னு அசிங்கமா திட்டுவா பகோடாஸ்...


Kumar Kumzi
அக் 03, 2024 09:15

சோத்துக்கு மதம் மாறிய நீ எதுக்கு மூக்க நுழைக்குற


பாமரன்
அக் 03, 2024 14:20

நீ மதம் மாறுணதை பார்த்தியா உண்டக்கட்டி கொமாரு...?? இந்த மாதிரி அசிங்கமா எழுதிகிட்டு அலையுற பீஸ்களால்தான் மலரின் ரெப்புட்டேஷன் கெட்டு போகுது... சுதந்திரமா உலாவ விட்டிருக்கும் சார்வால்தான் டிசைட் பண்ணனும்...


Dharmavaan
அக் 03, 2024 07:40

இப்போது இல்லை மீட்ப பற்றி செய்தி வருவதில்லை, அந்த அளவுக்கு மெத்தனம.கடத்துபவருடன் கூட்டு.இவர் 2018 கண்டுபிடித்ததை இப்போது மீட்போம் என்பது ஏமாற்று விளம்பரம்.திருடர்கள்


KRISHNAN R
அக் 03, 2024 07:24

ஒரு நல்ல மனிதர்


அரசு
அக் 03, 2024 06:23

இவர் ஒரு விளம்பரப் பிரியர். நான் தான் செய்தேன் என்று கூறும் இவர் மீது உ‌ள்ள குற்றச்சாட்டு இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.


Palanisamy T
அக் 03, 2024 07:31

இந்த அலட்சியப் போக்குதான் நம்மிடையே கூடாது. இந்த அலட்சிய போக்கு இன்றும் நம்மிடையேவுள்ள வேண்டாத பிறவிக் குணம். அவர் முன்னாள் பொறுப்பான காவல் துறை அதிகாரி. பல வழக்குகளில் அரசு சார்பாக நீதிமன்ற படிகள் ஏறியிருக்கலாம். தான் என்னப் பேசுகின்றோமென்று அவருக்கு தெரியும். அரசியல்வாதிகள் போன்று பொய்ச் சொல்லமாட்டார் என்று நம்பலாம் . போனது காலத்தால் விலைமதிப்பற்ற சிலைகள். அவருக்கு பதில் சொல்ல வேண்டிவர்கள் மக்களிடம் சொல்லட்டும்.


Ramesh
அக் 03, 2024 08:15

இவரால் பாதிப்படையும் அரசு இப்படித்தான் சொல்லும். பழம் உள்ள மரம் தான் கல்லடி படும்


Dharmavaan
அக் 03, 2024 09:38

இவர் செய்யவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா அப்போது பேசலாம் பொது மக்களுக்கு தெரிவிப்பது விளம்பரமல்ல


முக்கிய வீடியோ