உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நியோ மேக்ஸ் முதலீடு மோசடி அக்.8க்குள் புகார் அளிக்கலாம்

நியோ மேக்ஸ் முதலீடு மோசடி அக்.8க்குள் புகார் அளிக்கலாம்

சென்னை:'நியோ மேக்ஸ் ப்ராப்பர்ட்டி' என்ற நிறுவனத்தில், முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள், அக்., 8ம் தேதிக்கு பின் புகார் அளித்தால், ஏற்றுக்கொள்ள மாட்டாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.மதுரையை தலைமை இடமாக செயல்பட்டு வந்த, 'நியோ மேக்ஸ் ப்ராப்பர்ட்டி' என்ற நிறுவனம், பொது மக்களிடம் முதலீடுகள் பெற்று, 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது. இது குறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, 129 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிடம் வெளியிட்டுள்ள அறிக்கை: 'நியோ மேக்ஸ் ப்ராப்பர்ட்டி' நிறுவனத்தால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இருந்தால், அக்., 8ம் தேதிக்குள் புகார் அளிக்க வேண்டும். முதலீட்டாளர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தால், அவர்கள், gmail.comஎன்ற இ - மெயிலுக்கு, உரிய ஆவணங்களுடன் புகார் மனுக்களை அனுப்பலாம். அக்., 8ம் தேதிக்கு பின் கொடுக்கப்படும் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ