உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வே எண், பட்டா விபரம் அறிய விரைவில் வருகிறது புதிய செயலி

சர்வே எண், பட்டா விபரம் அறிய விரைவில் வருகிறது புதிய செயலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் நேரடியாக பார்க்கும் ஒரு நிலத்தின் சர்வே எண், பட்டா எண் போன்ற விபரங்களை சரியாக கூறுவது எளிதல்ல. வருவாய் துறையின் ஆவணங்களை கையில் வைத்து இருந்தாலும், அதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் இது தானா என்பதை, தெளிவாக கூறுவது எளிதல்ல. தற்போது, 'ஸ்மார்ட் போன்'களில் உள்ள ஜி.பி.எஸ்., புவியிட தகவல் தொகுப்பு வசதியை, மக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கி உள்ளனர். உணவு உள்ளிட்ட பொருட்களை, 'டெலிவரி' செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட நபரின் வீட்டை அடையாளம் காண்பதற்கும், இந்த வசதியை மக்கள் பயன்படுத்துகின்றனர்.தற்போது, யார் எந்த இடத்தில் இருந்தாலும், மொபைல் போனில், 'லைவ் லொகேஷன்' பகிர்வதன் வாயிலாக, சரியான இருப்பிடத்தை அறிய முடிகிறது. இதை அடிப்படையாக வைத்து, நிலத்தின் விபரங்ளை மக்கள் அறிய, புதிய வசதியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில், 'Tamilnilam Gioinfo' என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றனரோ, அந்த இடத்தின், 'கூகுள்' வரைபடத்துடன், சர்வே எண் விபரங்கள் திரையில் வந்து விடும். இதில், திரையை தேவைக்கு ஏற்ப பெரிதாக்கி பார்த்தால், தங்களுக்கு தேவையான நிலத்தின் சர்வே எண் விபரங்களை துல்லியமாக அறியலாம். தற்போதைய நிலவரப்படி, பிரதான சர்வே எண்களை, இதில் அறிய முடியும்.இதில், நீங்கள் ஏதாவது ஒரு பகுதியை குறிப்பிட்டு, அதன், 'அ' பதிவேடு, நில அளவை வரைபடம், பட்டா விபரம் போன்றவற்றை அறியும் வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். தொழில்நுட்ப ரீதியாக அனைத்து பணிகளும் முடியும் போது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும், பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தலாம். அடுத்த சில மாதங்களில், இந்த செயலி முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதை மக்கள் பயன்படுத்த துவங்கி விட்டால், வீடு, மனை வாங்கும்போது, ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களை, மக்களே எளிதாக சரிபார்க்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பல்லவி
ஏப் 18, 2025 00:41

பாமரர்கள் வாழும் பகுதியில் இந்த அலக்கழிப்பு மிகவும் சரவ சாதாரணம் நகர்ப்புற மக்களின் வாழ்க்கையிலும் இந்த நிலை தொடர்கிறது என்பது வருத்தத்திற்குரியது


Venkateswaran Rajaram
ஏப் 17, 2025 09:55

இத பாக்கணும்னு சர்வேயர் ஆஃபீஸிற்கு போனால் இவர்கள் என்னமோ கடவுள் போல பாவனை செயகிறார்கள், மக்களை பிச்சைக்காரர்களை போல் நடத்துவது, கேட்கும் லஞ்ச பணம் கொடுத்தால்தான் கண்ணிலே காண்பிப்பார்கள் இந்த மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு லஞ்சப்பணத்தில் தங்கள் மனைவி மக்களோடு சுகபோக வாழ்க்கை வாழும் இந்த ஈன சர்வேயர்கள்.. நாம் அலுவலகத்தில் எதாவது எதிர்த்து குரல் எழுப்பினால் அருகிலேயே அடியாட்களை வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள்


Krishnan Esakkimuthu
ஏப் 17, 2025 08:31

இது ஒரு நல்ல முயற்சி. அரசுக்கு பாராட்டுகள். அதேநேரம் கிராம கணக்குகள் தெளிவற்ற முறையில் மிக முக்கியமாக சர்வே பதிவேடுகள் நடைமுறைகளை அனுசரிப்பு செய்யாமல் ஏனோதானோவென அவரவர் விருப்பம் போல் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது எனவே இதனை சரி செய்யவும் அரசு வழிமுறைகள் காணவேண்டும்.


rama adhavan
ஏப் 17, 2025 06:53

பெரும்பான்மையான பழைய பட்டாக்கள் கணினியில் ஏறவில்லை. பழைய பட்டாகளின் சர்வே எண்ணில் கணினி பட்டா சர்வே எண்கள் உள்ளன. பல கிராமங்களின் பெயர்களை இ சர்வரில் கண்டு பிடிக்க முடியவில்லை. உ. ம். கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாகம் கிராமத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இது போல் பல உள்ளன. இந்த லட்சணத்தில் புதிய செயலியாம். என்னத்தை சொல்ல.


Kasimani Baskaran
ஏப் 17, 2025 03:48

இணையத்தில் இருப்பதை ஒரு செயலியாக ஆக்குவது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல... மாடல் அரசு இது போல சாதனைகளை மட்டுமே செய்யும்.. உடனே நாலு உடன்பிறப்புக்கள் வந்து உலகில் சிறந்த மாநிலம் தமிழகம்... செவ்வாய் கிரஹத்தில் கூட இது போல வசதியில்லை என்று உருட்டுவார்கள்.. உபில் ஆயிரம் பேருக்கு ஒரு கம்ப்யூட்டர் தமிழகத்தில் ஒரு ஆளுக்கு நாலு கம்ப்யூட்டர் இருக்கிறது என்று வேறு புளகாங்கிதம் வேறு அடைய விடுவார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை