புதிய டி.எஸ்.பி.,க்களுக்கு புது பாடத்திட்டத்தில் பயிற்சி
சென்னை: காவல் துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்படும், போலீஸ் எஸ்.ஐ.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்களுக்கு, காவல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி செயலக அதிகாரிகள் பங்களிப்புடன், புதிய பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நா டு அரசு பணியாளர் தேர் வாணையம் வாயிலாக, டி.எஸ்.பி.,க் கள், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, போலீஸ் எஸ்.ஐ.,க்கள் காவல் துறைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செ யல்படும், 'பி.பி.ஆர்.டி.,' எனும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயலக அதிகா ரிகள் பங்களிப்புடன், புதிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சமீப காலமாக, அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்த பாடங்கள், அவற்றை புலனாய்வு செய்வது குறித்த, செய்முறை தேர்வுகள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. விசாரணை அதிகாரிகளின் திறனை மேம்படுத்த, பிரச்னைக்குரிய மனுக்களுக்கு, விரைவாக தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்த பாடத் திட்டமும் இடம் பெற்றுள்ளது. தலைமைப் பண்புக்கான மதிப்பீடு, காட்சி ஊடக செய்திகளை கையாளுதல், கடலோர, எல்லை பாதுகாப்பு, கிரிப்டோ கரன்சி மோசடி, டார்க் வெப் இணைய மோசடி வழக்குகள், டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாத்தல், பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், மூன்றாம் பாலினத்தவர்களை கையாளுதல் தொடர்பாக, பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.