வாசகர்கள் கருத்துகள் ( 212 )
தமிழக அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழியாக உருது பயிற்றுவிக்கப்பட வேண்டும் .அப்போது ஹிந்தி பயிலாமல் ஹிந்தியிலும் பேச முடியும். அரபிக் எழுத்துக்கள் பயில்வதால் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பும் தமிழ் மாணவர்களுக்கு அதிகமாக கிடைக்கும். இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற மாணவர்களும் இஸ்லாமியர்கள் ஏற்கனவே மதரஸாவில் அரபிக் எழுத்துக்கள் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்று நினைத்து மிக்க பயன் பெறுவார்கள்
தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இந்தி, சமஸ்க்ரிதம் அல்லாத உருது, அரபி அல்லது hebrew போன்ற மொழிகள் விருப்ப மொழிகளாக பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய அரசு சொல்லியிருக்க வேண்டும். அப்பொழுது ஒரு கட்சிக்கும் எதிர்க்க துணிவிருக்காது. எதிர்த்தால் சிறுபான்மை ஓட்டுகள் காலி
தங்கள் வாடிக்கையாளர்கள் வட மாநிலங்களில் அதிகம் இருப்பதால் ஹிந்தி படித்த ஊழியர்கள் எளிதில் கலந்துரையாடி தீர்வு காண முடிகிறது, எனவே ஹிந்தி படிப்பது தவறு இல்லை என்று zoho நிறுவனர் திரு ஸ்ரீதர் வேம்பு அவர்கள் கூறியதற்கு , புதுக்கோட்டை MP மற்றும் dmk செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை ஆகியோர், அவருக்குத் தேவை என்றால் தங்கள் ஊழியர்களுக்கு தனியே சொல்லித் தந்து வேலைக்கு வைத்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்கிறார்கள். இதே போல சில மாதங்களுக்கு முன்பு ஹிந்தி தெரிந்த content wirters வேண்டுமென்று அறிவார்த்த திமுக IT விங் விளம்பரம் செய்தபோது , அவர்களுக்கும் திமுக சார்பாக பயிற்சிப் பட்டறைகள் நடத்தி இருக்கலாமே. எதற்கு பெட்ரோமாஸ் லைட்டே தான் வேண்டும் என்று கேட்க வேண்டும்?
வரவேற்பை விட எதிர்ப்பு அதிகம்
அய்யா புதிய கல்விக்கொள்கையினை மக்கள் வரவேற்கிறார்கள் என்று செய்தி போட்டுள்ளீர்கள் ஆனால் அந்தக் கொள்கை பற்றி யாருக்கு என்ன தெரியும் அரசுகளுக்கும், அந்தகல்வி கொள்கை பற்றி விவாதத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அது பற்றி தெரியும் அது வெளியே அவர்கள் சொல்லும்போது தங்களின் விருப்புவெருப்புக்கு ஏற்ப்மறைத்தோ, சேர்த்தோ சொல்வார்கள் இதைப்பற்றி மாநில அரசோ, அல்லது மத்திய அரசோ அந்தந்த மாநில மொழியில் பத்திரிக்கை விளம்பரம் கொடுத்திருந்தால் அதப்படிக்கும் பொதுமக்கள் முழுவிபரமும் அறிந்து கொள்வர். இதில் யார் நேரடியாக, அல்லது மறைமுகமாக செயல் படுகிறார்கள் என்பது புரியும் இதை ஏன் அரசுகள் செய்ய மறுக்கின்றன. மக்களுக்கு எதுவும் தெரியும் முன் அமுல்படுத்துவதன் மூலம் கருத்துக்கள் கேட்டோம் ஒப்புதல் அளித்தார்கள் என்று கூறி மடை மாற்றுவது. ஆனால் ஒன்றுமட்டும் தெரிகிறது, எந்தக்கட்சி ஆண்டாலும், ஜனநாயகம் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு அரசின் திட்டங்கள் பற்றி முழுமையாக தெரியவிடாமல் மறைப்பது என்பதை நன்றாகவே செய்கிறார்கள்.
விரும்புகிற ஏதாவது ஒரு மொழியை தானே படிக்கலாம் என சொல்கிறார்கள். இது எப்படி இந்தி திணிப்பாகும்? எல்லோரும் ஸ்தாலினை போலவோ உதயநிதியை போலவோ குடும்ப உதவி காரணமாக, பணம் செல்வாக்கு காரணமாக தமிழ்நாட்டில் அரசியலிலும் சினிமாவிலும் கொலோச்ச முடிகிறது. எல்லா பிள்ளைகளுக்கும் அந்த வாய்ப்பு இல்லையே. மொழி என்பது பாடம் என்பதை விட மக்களிடம் தொடர்பு கொள்வதற்கு தான். இன்னொரு மொழியை கற்று கொண்டால் தமிழ்நாட்டு எல்லை தாண்டி பிழைப்புக்கு போனால் எளிதாக இருக்குமே. இல்லாவிட்டால் அந்த மொழியில் உள்ள கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டு வாங்கி விட்டு அந்த மொழியை கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொள்ளலாம். இந்த லக்ஷணத்தில் மகேஷின் மகன் மட்டும் ஜேர்மன் படிக்கிறான். காசு அதிகம் வசூலிக்கும் பள்ளிக்கூடத்தில் படிப்பதாலா? அதுவும் இவர் அப்பா மகேஷுக்கு கிடைக்கும் அரசு சம்பளத்தில் இருந்து தானே.
குறைந்த பட்சம் கல்வி விஷயத்திலாவது பொது மக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்களின் கருத்தை தெரிந்து கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும். அதை விடுத்தது இவங்க இஷ்டத்துக்கு ஆடக்கூடாது. திராவிட மாடல் அரசு இன்னும் 66களிலேயே இருக்கிறது. மாணவ, மாணவிகளின் கல்வி தேவை என்ன என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். திராவிட மாடல் அரசு இவ்விஷயத்தை தேவையில்லாமல் அரசியல் ஆக்குகிறார்கள். திராவிட மாடல் அரசுக்கு முடிவு காட்டினால்தான் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
கலப்பட தமிழர்கள்
ஹிந்தி வேண்டாம் என்றால் அண்டை மாநில மொழிகளை எடுத்து படியுங்கள். ஹிந்தி என்ற பெயரில் மக்களை ஏமாற்றாதீர்கள்.
நான் இந்தியை கற்று அதன் வழியாக தான் எனது வாழ்க்கை நடக்கிறது. எனவே இந்தியை வைத்து அரசியல் செய்பவர்களை நம்பாதீர்கள். 3.4 மொழிகளை கற்பது நமக்கு நன்மையே
ஹிந்தி தெரியாதவர்கள் பிழைக்க வில்லையா மக்கள் தேவைப்படும் மொழியை படிக்க வழிவகை செய்ய வேண்டும்.