வனத்துறைக்கு புதிய தலைவர்
சென்னை:தமிழக வனத்துறையின் புதிய தலைவராக, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். வனத்துறை தலைவராக இருந்த சுதான்ஷூ குப்தா ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய வனத்துறை தலைவராக, தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலராக உள்ள ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி நியமிக்கப்பட்டார். சென்னையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தில், நேற்று அவர் பொறுப்பேற்றார். ஏற்கனவே, தமிழக வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டார். உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.