மேலும் செய்திகள்
ரூ.1.99 கோடியில் ஊராட்சிகளுக்கு டிப்பர் லாரி
23-Oct-2024
எல்.ஐ.சி., நிறுவனம் ஒற்றை பிரீமியம், குழு, நுண் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. இது, லாப பங்களிப்பற்ற, பங்குச் சந்தை சாராத, குழு, முழு இடர், ஆயுள் நுண் காப்பீட்டு திட்டமாகும். இது மைக்ரோ நிதி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள், அரசு சாரா அமைப்புகள் போன்ற நிறுவனங்கள், அவர்களுடைய உறுப்பினர்கள் அல்லது கடன்தாரர்களுக்கு ஏற்ற வகையில், எளிமையான முறையில், குறைந்த பிரீமியத்தில், ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை வழங்க, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா குழுக்கள், முதலாளி - தொழிலாளி குழுக்கள், ஒரே மாதிரியான விருப்பத்தில் துவக்கப்பட்ட குழுக்கள் போன்றவற்றின் இன்றியமையாத காப்பீட்டுத் தேவையை, இது பூர்த்தி செய்யும். இந்திய சந்தையில், இன்றளவும் காப்பீட்டு பாதுகாப்பின்றி உள்ளோருக்கு, குறைந்த பிரீமியத்தில்,ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை வழங்கிட பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 50 மற்றும் அதற்கு மேற்பட்டோர் உள்ள குழுக்களுக்கு வழங்கப்படும். இடர் காப்பீட்டுத் தொகையாக, 5,000 முதல் 20,000 ரூபாய் வரை பெறலாம், மருத்துவப் பரிசோதனை இன்றி எளிதாகப் பெற முடியும். ஒரு மாதம் முதல் 10 ஆண்டுகள்வரை, பாலிசி காலத்தை தேர்ந்தெடுக்கலாம். மேலும் தகவல்கள் பெற, licindia.comஎன்ற இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.licindia.inஎன்ற இணையதளத்தை பார்க்கலாம் என, எல்.ஐ.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
23-Oct-2024