உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்னி பறவைகள் என்ற பெயரில் நெல்லையில் புதிய கட்சி துவக்கம்

அக்னி பறவைகள் என்ற பெயரில் நெல்லையில் புதிய கட்சி துவக்கம்

திருநெல்வேலி:தேவநாதன்யாதவ் தலைமையில் புதிய அரசியல் கட்சி நெல்லையில் உருவானது.'யாதவர் மகாசபை' என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்தவர் தேவநாதன்யாதவ். தனியார் டிவி சேனல் மற்றும் பத்திரிகை உரிமையாளரான இவர் கடந்த சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் யாதவர் மகாசபை சார்பில் போட்டியிட்டார்.சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் 252வது நினைவுநாளான இன்று பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்தார். அழகுமுத்துகோன் பிறந்த கிராமம் கட்டாலங்குளத்திற்கு தமது தொண்டர்களுடன் சென்றிருந்தார். அங்கு அழகுமுத்துகோனின் வாரிசுகளான சிவத்தையாசாமி, ராசாத்தி, அழகுமுத்துவனஜா ஆகியோரை சந்தித்தார். அங்குள்ள சிலைக்கு மாலையணிவித்த தேவநாதன்யாதவ் பேசுகையில், இதுவரையிலும் ஒரு சமூக இயக்கமாக செயல்பட்டு வந்தது. கடந்த தேர்தலில் 42 தொகுதிகளில் போட்டியிட்டு3 லட்சத்து 68ஆயிரம் ஓட்டுக்களை பெற்றோம்.எங்கள் சமூகம் அரசியல் விழிப்புணர்வு இல்லாத சமூகமாக உள்ளது.எனவே அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வரையிலும் இலவசமாக கிடைக்க பாடுபடுவோம். எங்களைப் போல உள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் நலனுக்காக பாடுபடும். யாதவர் மகாசபை தொடர்ந்து செயல்படும். புதிய அரசியல்கட்சியாக 'அக்னி பறவைகள்' என்ற பெயரில் அரசியல்கட்சியை துவக்கியுள்ளோம். இதில் ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் பொறுப்பு வகிப்பார்கள். கட்சியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடத்தப்படும். விரைவில் ராமநாதபுரத்தில் அழகுமுத்துகோன் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ