உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவல்துறையில் மீடியாக்களை சந்திக்க புதிய பதவி உருவாக்கம்

காவல்துறையில் மீடியாக்களை சந்திக்க புதிய பதவி உருவாக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் காவல்துறையில் மீடியாக்களை சந்திப்பதற்கு என மீடியா தொடர்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:சென்னை குற்ற ஆவண காப்பக அதிகாரியாக இருக்கும் ஜெயஸ்ரீ,ஊர்க்காவல்படை அதிகாரியாகவும்ஆவடி துணை கமிஷனர் சங்கு, ஆவடி, ரெட்ஹில்ஸ், போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும்தூத்துக்குடியில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் மகேஸ்வரி, சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழக போலீசில் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஐஜி அவினாஸ் குமாரிடம் கூடுதலாக மாநில குற்றப்பிரிவு ஆவண காப்பக ஐஜி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.காவல்துறையில் மீடியாக்களை சந்திப்பதற்கு என புதிதாக மீடியா தொடர்பு அதிகாரி மற்றும் செய்தித்தொடர்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அதற்கு ஐபிஎஸ் அதிகாரியான முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
நவ 01, 2025 05:27

மனித வளத்தை வீணடிப்பது திமுக நிர்வாகத்தில் புதிதல்ல..


Mani . V
நவ 01, 2025 04:05

"ஊருல கல்யாணம் மாருல சந்தனம்" என்று கிராமங்களில் ஒரு சொலவாடை உண்டு. மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கும் இவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும். பிளடி இடியட்ஸ், மீடியாவிடம் பேச தனி அதிகாரிகள் என்றால் மற்ற அதிகாரிகள் மண்ணுமூட்டைகளா? ஏன் அந்த மண்ணுமூட்டைகளை பதவியில் வைத்து இருக்கணும்? அப்படியே "அப்பா"வுக்கும் ஒரு மைக் அதாவது ஸ்பீக்கர் நியமித்து விட்டால் அவர் தத்துப் பித்து என்று உளற வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை