உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இரு வாரங்களில் புது ரேஷன் கார்டு

 இரு வாரங்களில் புது ரேஷன் கார்டு

சென்னை: தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று கூறியதாவது: புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ளன. இரண்டு அல்லது மூன்று வாரங்களில், புதிய கார்டு வழங்கும் பணிகள் தொடங்கும். த.வெ.க.,வினர் எந்த பாரபட்சமும் இல்லாமல், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். சிலர், சில காரணங்களுக்காக, அரசு நிகழ்ச்சிகளை தவிர்ப்பதற்கு, த.வெ.க., பொறுப்பாக முடியாது. மக்களுக்கான சேவைகளை செய்யும் போது, அதை பொறுக்க முடியாதவர்கள், வழக்கறிஞர் நியமனத்தில் பணம் வாங்கியதாக கூறுகின்றனர். இது, புனையப்பட்ட கதை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !