வாசகர்கள் கருத்துகள் ( 19 )
First of all take accounts of the jewels in the jwellery shop. How much gold they get and how much got sealed from BIS and every day sale and tax collected and remitted. Bankers must understood that how much crores of rupees were given to cheaters and how much amount unreturnable and loans were right off. The worst rules were only for public but not to the big frauds. How much amount collected from the bank officials for fraud loans. Very cheap recommendations of the RBI.
RBI விதிமுறைகள் அடகுக்கடைகளை அதன் ஏல முறையை கட்டுப்படுத்துமா? அரசியல்வாதிகளை விட அரைவேக்காடு நிபுணர்கள் காமடி செய்கிறார்கள்
இவர்கள் செய்வதை பார்த்தால் கந்து வட்டி மற்றும் அடகு கடைகளுக்கு கொண்டாட்டம் தான். சாமானிய மக்கள் பாடு திண்டாட்டம் தான்
புதிய விதிகள் மிகவும் அருமையானது. அவசியமானது. நகை திருட்டை தடுக்க கூடியது. கருப்பு பணத்தை கொடுத்து நகையை செய்ய முடியாது. அதற்கு வரி செலுத்த வேண்டி இருக்கும். பழைய நகைகள் வைத்திருந்தால், அதற்கான ரசீது பெற, வங்கிகள் ஐந்து சதவீதம் வரி விதிக்க வேண்டும். இதனால் நாட்டிற்கு வரி வருமானம் கூடும்.
புது விதிகளுக்கும் நகை செய்வதற்கும் என்ன சம்பந்தம்? நகை செய்வது வங்கியில் அடகு வைக்க அல்ல. Forged or fake bill மூலம் நகை அடகு வைத்தாலும் அதை கண்டு பிடிக்கும் நிலையில் அனைத்து வங்கிகளும் இல்லை
ரூ 10 லட்சம் வரை விதிகளை தளர்த்தி ஒரு நபருக்கு கடன் அளிக்கலாம். புது விதியின் மூலம் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் பாதிப்பு அடைவார்கள் . இவ்விதி பல குடும்பத்தின் பொருளாதார சிக்கலை உருவாக்கும்.
தங்க கடன் வாங்க பில் அவசியமாம். தங்கம் வாங்கி ஆசாரி மூலம் நகை செய்தால் பில்லுக்கு எங்கே போவது.
அதாவது பில் இல்லாம தங்கம் வாங்கி? சரிங்க. புரியுது பாய்.
அறிவாளியே. 24 காரட் தங்கத்துக்கான பில் இருக்கும். ஆசாரி மூலம் செய்யும் போது 18-22 காரட் நகைக்கான பில் இருக்காது. இன்னும் இந்தியாவில் பரம்பரை ஆசாரியிடம் கொடுத்து நகை செய்யும் பழக்கம் உள்ளது. Is RBI promoting Corporate Jewellery Shops?
கேவலமான விதிமுறை. சில ஆண்கள் நகையை அவர்கள் பேரில் வாங்குவதில்லை. தன் குடும்ப பெண்களின் பேரில் வாங்குவார்கள். இந்த புது விதிப்படி கணவன் அடகு வைக்கும் நகை தன் மனைவி பேரில் இருந்தால் பேங்க் சென்று விசாரிக்குமா அவர்கள் இருவரும் இப்போது கணவன் மனைவியா இல்லையா என்று? வங்கியின் வேலை கொண்டுவந்த நகைக்கு ஈடாக கடன் கொடுப்பதே அன்றி அது பினாமியா இல்லையா என விசாரிப்பது அன்று. பேசாமல் நகை கடன் கொடுக்கும் வேலையை செய்ய சிபிஐ போன்று ஒரு அமைப்பை உருவாக்கலாம். இதில் இன்னும் ஒரு கேவலமான விஷயம் என்னவென்றால் நகை கடன் புதுப்பித்தல். ஆதாவது இன்று ரொக்கம் நாளை கடன் பாலிசி. இந்த காமெடி தனத்தால் நாள் வட்டிக்கு கடன் வாங்கவேண்டி உள்ளது. RBI க்கு இப்போது உள்ள பிரச்சனை என்னவென்றால் எதிர்கால தங்க விலையை அவர்களால் கணிக்கமுடியவில்லை. இன்றைய மதிப்புப்படி கடன் கொடுத்து விட்டு நாளை விலை குறைந்தால் என்ன செய்வது என்ற பயத்தால் இப்படி மக்களை அலைக்கழிக்கிறார்கள்.
அப்போ திருட்டு நகைக்கு கூட கடன் கொடுக்கணும்னு வலியுறுத்துறீங்க. அப்போ கடத்தல் தங்கத்துக்கு? பாராட்டுக்கள்.
குடியிருப்பு மனைகளை ரியல் எஸ்டேட் முதலீடாக கருதுவதால் நிஜமாகவே சொந்தவீடு கட்டும் எண்ணத்திலுள்ள நடுத்தர மக்கள் இடம் வாங்க முடியவில்லை. மேலும் விற்பனையாகும் தங்கத்தில் முக்கால்வாசி கடத்தல், ஹவாலா மூலம் வருவதுதான். இதனால் பயங்கரவாதிகளே பயனடைகின்றனர். ஆக நிலம் மற்றும் தங்கம் முதலீடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அவசியமே. பான்கார்டு விவரங்கள் இல்லாமல் நகைக்கடன் பெறத் தடைவிதிக்க வேண்டும்.
புதிய விதிமுறைகள் மிகவும் வரவேற்கவேண்டியவை. தங்கத்திலும் அதன் வியாபாரத்திலும்தான் அதிக லாபம், வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப்பணம் புழங்குகிறது. எந்த நகைக்கடையிலாவது பில் தருகிறார்களா? எல்லாமே எஸ்டிமேட்த்தான். நுகர்வோருக்கு சிறியளவில் வரிகட்டாமல் பலன் என்றால் விற்பனைசெய்வோருக்கு கணக்கிலவராத பணப்புழக்கம். மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மைபயக்கும் என்றால் அரசியல்வியாதிகள் எதிர்ப்பதுதான் வழக்கம்.
சுய சான்று கொடுத்து கடன் பெறலாம் .
புதிய விதிகளை அரசு திரும்ப பெற வேண்டும். மக்கள் பாதிக்கப்படுவரென்று அறிக்கை விட்ட பாமக ராம்தாஸ் இந்த செய்தியை படிக்க வேண்டும்