உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் தேர்வு

நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் தேர்வு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளி இளைஞர் ஜோஹ்ரம் மம்தானி, 33, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான மேயர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க உள்ளது. தற்போது நியூயார்க் மேயராக இருக்கும் எரிக் ஆடம், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். 2021 தேர்தலில் வெற்றி பெற்று மேயர் ஆனார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2r52jsdq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தாண்டு தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட, நியூயார்க் நகர மக்களுக்கு பெரிதும் அறிமுகமில்லாத ஜோஹ்ரம் மம்தானி போட்டியில் குதித்தார். முன்னாள் கவர்னர் ஆண்ட்ரிவ் கியுமோவும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் இருந்தார்.இதில் ஜோஹ்ரம் மம்தானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் தாய் மீரா நாயர், ஒடிசாவைச் சேர்ந்தவர்; சினிமா இயக்குநர். 'சலாம் பாம்பே', 'காமசூத்ரா: ஏ டேல் ஆப் லவ்' ஆகிய படங்களை இயக்கியவர். இவரின் தந்தை மஹ்மூத் மம்தானி, குஜராத் முஸ்லிம்.இந்நிலையில், தொழிலதிபராக இருந்த ஜோஹ்ரம் மம்தானி அரசியலில் இறங்கினார். 2021ல் நியூயார்க் மாகாண சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின் தற்போது மேயர் தேர்தலில் போட்டியிட விரும்பி ஜனநாயகக் கட்சி சார்பில் புதுமையான பிரசாரங்களை முன்னெடுத்தார். அதில் பாலிவுட் வசனங்களை பயன்படுத்தியது கவனம் பெற்றது.இதன் காரணமாக ஜனநாயகக் கட்சி சார்பில் நடந்த வேட்பாளர்களுக்கான முதன்மை தேர்வில், சக வேட்பாளரான ஆண்ட்ரிவ் கியுமோவை விட 40 சதவீதம் அதிக ஆதரவு பெற்று வேட்பாளராக தேர்வானார்.இதன் வாயிலாக நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி வேட்பாளர் என்ற பெருமையை ஜோஹ்ரம் மம்தானி பெற்றுள்ளார். நவம்பரில் நடக்கும் மேயர் தேர்தலில் இவர் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கர்ட்டிஸ் ஸ்லிவாவை எதிர்த்து போட்டியிடுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

nisar ahmad
ஜூன் 26, 2025 21:03

வயிற்றெறிச்சல் அப்பட்டமா தெறியுது.


Suppan
ஜூன் 26, 2025 16:58

இந்த ஆசாமி அப்பட்டமான பாகிஸ்தானிய ஆதரவாளர் . பாவம் நியூயார்க்


Kulandai kannan
ஜூன் 26, 2025 14:14

அவரவர் நாட்டை அவரவர் தான் ஆளவேண்டும். இவரது தாய் மீரா நாயர் ஒரு முஸ்லீமை மணந்து மகனை முஸ்லீமாகவே வளர்த்து, இந்து மதப் பழக்கங்களை மட்டும் எதிர்த்துப் படமெடுப்பார்.


Vijay D Ratnam
ஜூன் 26, 2025 13:43

வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல. குடியரசு கட்சிக்கே நியூயார்க்ல வாய்ப்பில்ல. ஒரு பலிகடா அம்புட்டுதேன்.


பெரிய ராசு
ஜூன் 26, 2025 12:25

மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பு கொடுங்கள் ..இல்லயென்றால் ஜெர்மனி பிரான்ஸ் கஷ்டப்படுவது போல தான்


Ramesh Sargam
ஜூன் 26, 2025 12:19

வேட்பாளராக தேர்வு. தேர்தலில் நின்று வெற்றி பெறவேண்டும். பிறகு நியூயார்க் மக்களுக்கும், குறிப்பாக அங்குள்ள இந்திய பிரஜைகளுக்கும் பாரபட்சமில்லாமல் பணிபுரியவேண்டும். அப்படி பாரபட்சமில்லாமல் பணிபுரிவாரா?


ஆரூர் ரங்
ஜூன் 26, 2025 11:11

நம்மூரு இடதுசாரி நகர நக்சல் கும்பல்களின் அன்பர். இந்தியாவையும் ஹிந்துக்களையும் மட்டமான வார்த்தைகளில் திட்டும் பிறவி. இவனால் அமெரிக்காவுக்கே தலைவலி ஏற்படும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 11:06

சமூக நீதி வழியில் ..இடஒதுக்கீடு அடிப்படையில் ஒரு பட்டியல் இனத்தவருக்குத்தான் நியூயார்க் மேயர் பதவி கிடைக்கவேண்டும் ... தமிழக முதல்வர் இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றி அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்


Venkataraman
ஜூன் 26, 2025 11:05

இங்கிலாந்தில் லண்டன் உட்பட பல பெரிய நகரங்களில் பாகிஸ்தானியர்கள் மேயர்களாக இருக்கிறார்கள். இப்போது அமெரிக்காவிலும் முஸ்லிம்கள் மேயர்களாகவும் மற்ற பெரிய பதவியிலும் இருக்கிறார்கள்.


Anand
ஜூன் 26, 2025 10:18

எனவே, இதனால் நம் நாட்டிற்கு ஏதேனும் பிரயோஜனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கேடு நினைக்காமல் இருந்தால் நல்லது.


முக்கிய வீடியோ