உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழகத்தில் 17 மாவட்டங் களில், 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 99.3 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 54 கழிப்பறைகள், 13 ஆய்வ கங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு, 17.6 கோடி ரூபாயில், 198 வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இவற்றின் சாவியை, துறை அலுவலர் களுக்கு நேற்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.தமிழ் வளர்ச்சி கழகத்தில், கணினி தமிழ், செயற்கை நுண்ணறிவு தமிழ் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான காசோலையை, தமிழ் வளர்ச்சி கழகத் தலைவர் ராஜேந்திரனிடம், முதல்வர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !