உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழுவிடம் கருத்து தெரிவித்த என்.ஜி.ஓ., சங்கம் பழைய திட்டத்தை தொடர புதிய யோசனை

ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழுவிடம் கருத்து தெரிவித்த என்.ஜி.ஓ., சங்கம் பழைய திட்டத்தை தொடர புதிய யோசனை

மதுரை : தமிழக அரசின் ஓய்வூதிய திட்ட ஆய்வுக் குழுவை சந்தித்த என்.ஜி.ஓ., சங்க நிர்வாகிகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை எளிதாக அமல்படுத்துவது குறித்து யோசனை வழங்கியுள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1.4.2003 முதல் ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் 22 ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றன. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த போர்க்கொடி துாக்கி வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அ.தி.மு.க., ஆட்சிகாலத்தில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஆய்வறிக்கை எதையும் தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையே மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்று ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதனையும் எந்த சங்கமும் ஏற்கவில்லை. ஆய்வுக்குழுவுடன் சந்திப்பு 2021 ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், சமீபத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு அனைத்து சங்கங்களிடமும் ஆலோசனை, கருத்துக்களை கேட்டு வருகிறது. சமீபத்தில் இக்குழுவை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ., சங்கம்) நிர்வாகிகள் மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமையில் பொதுச் செயலாளர் தேசிங்குராஜன், துணைத் தலைவர் ஆலீஸ்ஷீலா, துணைத்தேர்தல் அலுவலர் பத்மினி, விழுப்புரம் மாவட்ட தலைவர் நாகராஜன் சந்தித்து கருத்துக்களை தெரிவித்தனர். மாநில தலைவர் மகேந்திர குமார் கூறியதாவது: தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தபின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அலுவலர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து மத்திய அரசு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. என்.ஜி.ஓ.,சங்கம் யோசனை மத்திய அரசு வழங்கும் 18.5 சதவீதத்தை மாதந்தோறும் மாநில அரசே வழங்கி அதனை ஓய்வு பெறும் காலம் வரை தொடர்ந்து சேர்த்து வைக்க வேண்டும். ஓய்வு பெறும் காலத்தில் அந்த மொத்த தொகையை, வட்டியுடன் சேர்த்தாலே, பழைய ஓய்வூதிய திட்டத்தை எளிதாக நடைமுறைப்படுத்தி விடலாம். இதனால் அரசுக்கு வேறு நிதிச்சுமையும் வராது. பழைய ஓய்வூதிய திட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமூக பாதுகாப்பு திட்டம். அரசு ஊழியர்களின் தலைமுறைக்கும் இது பாதுகாப்பு அளிப்பதால் உடனே செயல்படுத்த வேண்டும். இக்கருத்தை இக்குழு அரசுக்கு பரிந்துரைத்து, செயல்படுத்த வேண்டும். இத்துடன் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோர், ஒப்பந்த, தினக்கூலி பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7800 ஐ நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gnana Subramani
ஆக 27, 2025 21:40

லஞ்சம் வாங்க மாட்டோம், மற்றவர்கள் லஞ்சம் வாங்குவதற்கும் துணை போக மாட்டோம் என்று அரசு ஊழியர்கள் சங்கம் உறுதி கொடுக்க வேண்டும்


Ravi Kumar
ஆக 27, 2025 19:33

அரசு ஓய்வு ஊதியம் கொடுத்தால் , தனியாரும் கொடுக்க வேண்டும் . சட்டம் அனைவருக்கும் சமமாய் இருக்கும் . அல்லது எவருக்கும் கொடுக்க வேண்டாம் .


Bhaskaran
ஆக 27, 2025 15:24

வேலையே செய்யாம தண்ட சம்பளம் வாங்கும் பிறவிகள் இவனுகளுக்கு முழு சம்பளமும் ஓய்வூதியம் கொடுத்தாலும்திருப்திகிடையாது


V RAMASWAMY
ஆக 27, 2025 14:10

இது ஒரு அனாவசிய வேலை. வேலையே செய்யாது கிமபளம் கொடுத்தால் தான் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு சம்பளமே ஓய்வூதியம் மாதிரி தான். இந்த வகையில் அவர்களுக்கு அரசு கஜானா காலியாகும் விதமாக ஓய்வூதியம் தேவையே இல்லை . வெகு திறமையாக இவர்களை விட நேர்மையாக நேர்த்தியாக திட்டம்மிட்ட சமயத்திற்கும் செவ்வனே வேலை செய்யும் தனியார் நிறுவன ஊழிகர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்கு எவ்வித ஓய்வூதியமும் கிடையாது.


முக்கிய வீடியோ