உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை வேவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரி சதி திட்டம்!

தமிழகத்தை வேவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரி சதி திட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இலங்கையில் பாகிஸ்தான் துாதரக அதிகாரியாக பணியாற்றிய அமீர் சுபைர் சித்திக், இந்தியாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதுடன், தமிழகத்திற்கு உளவாளிகளை அனுப்பி வேவு பார்த்துள்ளார். இது தொடர்பான வழக்கில், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், அக்., 15ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் உளவாளியாகச் செயல்பட்ட, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 35, என்பவர், கடந்த 2012ல் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p52e31ba&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதிர்ச்சி

அதேபோல, 2014ம் ஆண்டு, சென்னை மண்ணடியில் பதுங்கியிருந்த பாக்., உளவாளி ஜாகீர் உசேன், 35; இவரது கூட்டாளிகள் சிவபாலன், 40; சலீம், 35; ரபீக், 32, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஜாகீர் உசேன் அளித்த வாக்குமூலத்தின்படி, அதே ஆண்டில், சென்னை சாலிகிராமம், முத்தமிழ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அருண் செல்வராஜ், 36, என்பவரும், கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் இவர்கள், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர் விசாரணையில், ஜாகீர் உசேன், அருண் செல்வராஜ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அருண் செல்வராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதன் வாயிலாக, தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு வட்டத்தில் அவர் இணைந்தார். அவரது மொபைல் போன், 'லேப்டாப்' உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாக்குமூலம்

அவற்றில், சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துாதரகம், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், ஆந்திராவில் விசாகப்பட்டினம், கொச்சி கப்பல் கட்டும் துறைமுகம் உள்ளிட்ட பல இடங்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.இவற்றை, அருண் செல்வராஜ், ஜாகீர் உசேன் ஆகியோர், மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்த பாக்., அதிகாரிகளிடம் ஒப்படைத்ததும் தெரிய வந்தது. அருண் செல்வராஜ் மற்றும் ஜாகீர் உசேன் இருவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், 'எங்களுக்கு மூளையாகச் செயல்பட்டது, பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியைச் சேர்ந்த அமீர் சுபைர் சித்திக், 51' என கூறியிருந்தனர்.

தொடர் விசாரணை

இதையடுத்து, அமீர் சுபைர் சித்திக் குறித்து தீவிரமாக விசாரித்தபோது, அவர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பாக்., துாதரகத்தில், 'விசா' பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்ததையும் அவர்கள் தெரிவித்தனர்.தொடர் விசாரணையில், பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உறுப்பினரான இவர், தமீம் அன்சாரி, ஜாகீர் உசேன், அருண் செல்வராஜ் உள்ளிட்டோரை, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், பாக்., உளவாளிகளாக நியமித்து, தாக்குதலுக்கு வேவு பார்த்ததையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டறிந்து உறுதி செய்தனர். அமீர் சுபைர் சித்திக் தொடர்பான வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந் நீதிமன்றம், அமீர் சுபைர் சித்திக் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே கைது வாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், அமீர் சுபைர் சித்திக், வரும் அக்., 15ம் தேதி காலை 10:30 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டினரை வேவு பார்க்கும் 'கவுன்டர் இன்டலிஜென்ஸ்'

இந்தியாவுக்குள் ஊடுருவி ரகசியமாக செயல்படும் வெளிநாட்டினரை கண்காணிக்க, மத்திய உளவுத்துறையில் 24 மணி நேரமும் செயல்படும், 'கவுன்டர் இன்டலிஜென்ஸ்' எனும் எதிர் உளவு பார்த்தல் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவு, மாநில உளவுத் துறைகளிலும் உண்டு. ஆனால், பெயரளவில் செயல்படுவதாகவும், இப்பிரிவை பலப்படுத்துமாறும், மாநில உளவுத் துறைகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியது. அதன்படி, தமிழக உளவுத் துறையின் கவுன்டர் இன்டலிஜென்ஸ் பிரிவை பலப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. இது குறித்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டனைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரான ஜோனாதன், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்பிக்க முயன்றார். திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் இருந்த பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இலியன் ஜெட்ரொகோவ் மார்க்கோவ் தப்பி ஓடிவிட்டார். இம்முகாமில் தங்க வைக்கப்பட்ட இலங்கை நாட்டினர், பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்தனர். அதேபோல, சென்னை புழல் சிறை கைதிகள், 'வாட்ஸாப்' வாயிலாக, வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் ஆசாமி களை மிக எளிதாக தொடர்பு கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பத்திரிகையாளர்கள், மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக வருவோர், இங்கு மத மாற்றத்திற்கான பிரசாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை, தமிழக காவல் துறை யினருக்கு சுட்டிக்காட்டினோம். இதையடுத்து, கவுன்டர் இன்டலிஜென்ஸ் பிரிவை தமிழக போலீசார் பலப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ponssasi
செப் 12, 2025 20:30

கடும் குற்றவாளிகளை கூட மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. எளிதில் வெளியில் வரக்கூடிய பிரிவுகளில் வழக்குகள் போடப்படுகிறது இதுவும் ஒரு காரணம்.


Tamilan
செப் 12, 2025 20:01

எங்கெல்லாம் மதவாத குண்டர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பயங்கரவாதம் இருக்கும்.


மனிதன்
செப் 12, 2025 19:20

தமிழ்நாட்டில் இருந்து அனைத்தையும் அனுபவித்து தமிழ்நாட்டை குறைகூறும் இவர்களுக்கும் ,இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு சாமரம் வீசுபவர்களுக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை....உண்மையில் நமது ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அதிகமாக கொடுத்தது அரசுபதவிகளில் கோலோச்சிக்கொண்டிருக்கும் வடக்கன்கள்...கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும்,வளர்ச்சியிலும் மற்றமாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது என்பதை உண்மையில் அவர்களுக்கு தெரிந்திருந்தும் வெளியில் கூறமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் அஜெண்டா அப்படி... கிடைக்கும் வருமானம் அப்படி...


ஆரூர் ரங்
செப் 12, 2025 19:57

'சார்'கள் அதிகமாக உள்ள மாநிலம் முன்னேறிய மாநிலமா? (விடியல் கூட மிசா வில் சிறையிலடைக்கப்பட்டவர்தான்.)


கத்தரிக்காய் வியாபாரி
செப் 12, 2025 13:54

அமீர் > வெளியேதான் இருக்கிறார். உள்ளதூக்கிப்போட்டு நல்லா நொங்கு எடுங்கள்.


Barakat Ali
செப் 12, 2025 13:40

ஏற்கனவே நடவடிக்கைகள் துவங்கியிருந்தாலும், துப்பு துலங்க, ஆஜர்படுத்த தாமதம் ஏன்? நாட்டைப் பாதுகாக்கும் பாஜக என்ன செய்து கொண்டிருந்தது? [அமீர் சுபைர் சித்திக், வரும் அக்., 15ம் தேதி காலை 10:30 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.]


Barakat Ali
செப் 12, 2025 13:37

பெரும்பான்மை ஹிந்துக்கள் இளிச்சவாயர்களா ???? [2014ம் ஆண்டு, சென்னை மண்ணடியில் பதுங்கியிருந்த பாக்., உளவாளி ஜாகீர் உசேன், 35 இவரது கூட்டாளிகள் சிவபாலன், 40 சலீம், 35 ரபீக், 32, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.]


Barakat Ali
செப் 12, 2025 13:36

பெரும்பான்மை ஹிந்துக்கள் இளிச்சவாயர்களா? [பாகிஸ்தான் உளவாளியாகச் செயல்பட்ட, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 35, என்பவர், கடந்த 2012ல் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.]


venugopal s
செப் 12, 2025 11:30

இந்த சம்பவம் நடந்தது மற்றும் குற்ற வழக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது எல்லாம் 2012 முதல் 2014 வரை, ஏதோ இப்போது திமுக ஆட்சியில் நடந்தது போல் ஏன் இந்த செய்தி என்று புரியவில்லை. உடனே சங்கிகளும் அரைகுறையாக படித்து விட்டு திமுக ஆட்சியை குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர்!


ஆரூர் ரங்
செப் 12, 2025 12:06

திமுக ஆட்சி இருந்திருந்தால் எந்த நடவடிக்கையும் இருந்திருக்காது. விடுதலை விருந்தும் தகைசால் விருதும் கிடைத்திருக்கும்.


Rathna
செப் 12, 2025 11:29

இங்கே அவங்களுக்கு ஆதரவு அதிகம். அதனால் தான் நடக்கிறது.


Anand
செப் 12, 2025 10:57

திருட்டு திராவிஷம் இருக்கும்வரை தமிழகத்திற்கு கேடு நினைப்பவர்களின் ஆட்டம் நடந்துக்கொண்டுதான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை