உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இரவு மழை 35 விமான சேவை பாதிப்பு

சென்னையில் இரவு மழை 35 விமான சேவை பாதிப்பு

சென்னை:நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பெங்களூரு, மும்பை, விஜயவாடா, திருவனந்தபுரம், கோலாலம்பூர் உட்பட 13 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. மழை ஓய்ந்த பின் தரையிறக்கப்பட்டன.சென்னையில் இருந்து டில்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி, கோவை, கோல்கட்டா, இந்தூர், சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய 20 விமானங்கள், இரண்டரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இலங்கை தலைநகர் கொழும்பு -- சென்னை இருவழி மார்க்கத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை