உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டில்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்!

நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டில்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்!

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி புறப்பட்டு சென்றார். டில்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையில் 'நிடி ஆயோக்' கூட்டம், நாளை (மே 24) டில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 23) காலை 9.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றார். டில்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.டில்லியில் முக்கிய பிரமுகர்களை ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்; கூட்டம் முடிந்து, அன்றே சென்னை திரும்புகிறார்.இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தால், பிரதமரை சந்தித்து பேசுவார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Natarajan Ramanathan
மே 24, 2025 02:56

டெல்லி செல்வதற்குமுன்பாக நன்றாக காலில் விழுவதற்கு பயிற்சி எடுத்து சென்றதாக தகவல்.


தாமரை மலர்கிறது
மே 23, 2025 19:12

நிதியை தவிர பெருசா வேறு என்னத்த ஸ்டாலின் கேட்கபோகிறார்? பிச்சை போடமுடியாது. ஓடிபோயுடுன்னு விரட்டிவிடுங்கள்.


என்னத்த சொல்ல
மே 23, 2025 19:51

இது பிச்சை இல்லை. நம் உரிமை. இந்தியாவில் அதிக வரி தமிழ்நாட்டிலிருந்து தான் போகிறது.


sankaranarayanan
மே 23, 2025 19:12

நமது முதல்வர் டில்லி சென்றது நிதி ஆயோக் கூட்டத்திற்கு அல்ல அவருடைய அரசியல் குடும்பத்தை சந்தித்து பேசவே சென்றுள்ளார் முதல் சந்திப்பு கூட்டம் அந்த ராகுல் அவர் தாயுடன்தான் உறுப்புட்டாப்புலதான் நாளை என்னவோ நிதி ஆயோக் கூட்டத்தில் என்ன சொல்ல வேண்டும் என்று இன்று சோனியாவும் பப்புவும் ஒரு ஒத்திகை பாடம் நடத்தியுள்ளார்கள் நாளை பார்ப்போம் என்ன நடக்கிறது என்று


Anand
மே 23, 2025 18:06

கூட்டத்தில் மற்றவர்கள் பேசுவதை பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு பார்க்கவேண்டியதுதான்.


பா மாதவன்
மே 23, 2025 17:53

காங்கிரஸ் தங்கபாலு மாதிரி ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளர் கூட இருந்தால், பிரச்னைகளை - தமிழக பிரச்னை அல்ல ... சொந்த பிரச்னைகளை, அழகாக எடுத்து சொல்ல உதவியாக இருக்கும்.


Murthy
மே 23, 2025 17:47

வெள்ளைக்குடையை மறந்திடாதீர்கள் ........குடும்ப உறுப்பினர்களுக்கு ஒன்னு என்றால் டெல்லி ஓடுவார் ....


SRITHAR MADHAVAN
மே 23, 2025 17:07

யாருடைய "நிதி"யைப் பாதுகாக்க, டெல்லி வருகை.,


krishna
மே 23, 2025 17:04

WHITE UMBRELLA UDAN SENDRAAR ENGAL MAAVERAR


M. PALANIAPPAN, KERALA
மே 23, 2025 16:03

அது என்ன தனியாக சந்தித்து பேச நேரம்? அப்படி என்ன பேச உள்ளது


ஆரூர் ரங்
மே 23, 2025 15:30

எங்க ஊர்க்காரரும் கச்சேரிக்குப் போறாரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை