உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை: பா.ஜ.,

 த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை: பா.ஜ.,

திருப்பூர்: மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சரும், பா.ஜ., தமிழக தேர்தல் இணை பொறுப்பாளருமான முரளிதர் மோகல் நேற்று திருப்பூரில் அளித்த பேட்டி: கோவில்களின் இந்திய தலைநகராக தமிழகம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இங்கு இருக்கும் கோவில்களின் நிர்வாகம் அப்படி இல்லை. மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் அரசு இருந்த போது, 2014ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு 94,000 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. ஆனால், மோடியின் ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க, மாநிலங்களில் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டும்; அப்பணியை மாநில அரசு தான் செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு அதை விரைந்து செய்வதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின், அது வேகப்படுத்தப்படும். தமிழகத்தில் இரட்டை இன்ஜின் அரசு தான் வேண்டும். மதுக்கடை, போதை பொருள் புழக்கம், அதனால் சட்டம் - ஒழுங்கு கெட்டு போய் உள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது. தே.ஜ., கூட்டணி ஆட்சியில் இதெல்லாம் இருக்காது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டில், 61 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் மீதான வன்முறை 50.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கூட்டணி தொடர்பாக, த.வெ.க.,வுடன் பா.ஜ., பேச்சு நடத்தவே இல்லை. தே.ஜ., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கிறது. விரைவில் தீர்வு எட்டப்பட்டு அறிவிக்கப்படும். இவ்வாறு முரளிதர் மோகல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

முருகன்
பிப் 09, 2026 08:49

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மாநில வரி வருவாய் இப்போது இருக்கும் வரி வருவாய் பற்றியும் கூறினால் இது குறைவு என்பது தெரியும்


vivek
பிப் 09, 2026 08:51

உனக்கு தெரிஞ்சா சொல்லு முருகா..சும்மா கம்பி கட்டாதே


Theni Saaral
பிப் 09, 2026 08:29

சும்மா மிரட்டி தான் விட்டோம்


Gentleman
பிப் 09, 2026 06:02

தயவு செய்து இந்த பிரேமா லதாவை TVK யில் சேர்த்துக்கொள்ள பேச்சு வார்த்தை நடத்துங்க உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் இந்த அம்மணி அ தி மு க மற்றும் தி மு க இடம் பெட்டியை வாங்கிக்கொண்டு செட்டில் ஆகா பாக்கிறாங்க பெட்டி மற்றும் ராஜ்யா சபா வேண்டுமாம் இந்த இருவரும் இந்த தப்பை செய்ய வேண்டாம்


vijay
பிப் 09, 2026 06:01

எப்பா.. நீங்க நடத்தவே வேணாம்


முக்கிய வீடியோ