உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை: இடைத்தேர்தல் குறித்து விஜய் கட்சி அறிவிப்பு

போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை: இடைத்தேர்தல் குறித்து விஜய் கட்சி அறிவிப்பு

சென்னை: 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிக்கிறது. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை' என த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்தார்.ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. களத்தில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் தே.மு.தி.க., தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்த சூழலில், ''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிக்கிறது. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை' என த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=103ecgpg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும். அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.மேலும் தமிழகத்தில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆனந்த் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

S.V.Srinivasan
ஜன 17, 2025 15:07

எல்லோரும் MGR ஆகி விட முடியுமா???


Nallavan
ஜன 17, 2025 16:26

1972 செப்டம்பர் ல்ல, அ.தி.மு.க. கட்சி ஆரம்பிச்சு, 1973 மே மாதம், திண்டுக்கல் நாடாளுமன்ர இடை தேர்தலில், போட்டி இட்டு, 52% வாக்குகள் வாங்கி, ஆளும் தி.மு.க. வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி 18%, காமராஜர் காங்கிரஸ் இரண்டாமிடம் மாபெரும் வெற்றி பெற்ற எம்.ஜி.யார் தில் யாருக்கும் வராது.


Muralidharan raghavan
ஜன 17, 2025 14:58

இந்த நாட்டில் ஒரு எம் ஜி ஆர் ஒரு என் டி ஆர் மட்டுமே. எல்லாரும் அவர்களை போல் ஆக முடியுமா என்பது கேள்விக்குறி


sankar
ஜன 17, 2025 13:44

நாம் தமிழரின் முதல் எம்எல்ஏ


BHARATH
ஜன 17, 2025 13:16

இது காமெடி பீஸ்


Ramesh Sargam
ஜன 17, 2025 13:02

அப்படி ஆதரவு அளித்தாலும், நாம் எதிர்பார்க்கிற அளவுக்கு வாக்குகள் கிடைக்காது ஆதரவு பெரும் கட்சிகளுக்கு.


Sankare Eswar
ஜன 17, 2025 12:50

சப்பானி ரஜினி இல்லாத குறையை போக்க வந்த போக்கிரி ராஜா.... ஹி .. ஹி ....


தியாகு
ஜன 17, 2025 12:45

ஜோசெப் விசை கட்சி தொடங்கியதே கட்டுமர திருட்டு திமுகவிற்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்குத்தான். ஆண்டவர் கமல் எதை ஆன்டான்னுதான் தெரியல செய்த வேலைய ஜோசெப் விசையும் செய்ய வந்துட்டார். இவனது லெட்டர் பேடில் நடுவில் சொரியான் படத்தை வைத்துள்ளான். இது ஒன்று போதும் இவன் எப்படிப்பட்ட டுபாக்கூர் என்று தெரிந்துகொள்ள.


Murugesan
ஜன 17, 2025 12:34

மண்டையில மூளையற்றவன்


Roy
ஜன 17, 2025 12:32

எவன் ஆதரவு கேட்டான்?


சம்பா
ஜன 17, 2025 12:26

நா.த.க.வும் வாபஸ் வாங்கனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை