உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமதாஸ் தனிச்செயலரிடம் தொடர்பு கூடாது: அன்புமணி

ராமதாஸ் தனிச்செயலரிடம் தொடர்பு கூடாது: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம் : அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது, அவருடைய தனிச் செயலராக இருந்தவர் சுவாமிநாதன். அவரை, கடந்த 13ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தனது தனிச் செயலராகவும், செய்தி தொடர்பாளராகவும் நியமித்தார்.தற்போது ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நடைபெறும் மோதலில், கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் சுவாமிநாதன். அதையடுத்தே, அவரை தன்னுடைய தனிச் செயலராக நியமித்தார் ராமதாஸ். சுவாமிநாதனின் செயல்பாடுகள் அன்புமணியின் கவனத்திற்கு வந்தது.இதன் தொடர்ச்சியாக அன்புமணி தனது 'எக்ஸ்' தள பக்கத்தில், 'எனது முன்னாள் உதவியாளர் சுவாமிநாதனுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை. 'பா.ம.க.,வினர், எனது நலன் விரும்பிகள் சுவாமிநாதனுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்' என தெரிவித்துள்ளார். இது, அன்புமணி, ராமதாஸ் இடையேயான மோதலை அதிகப்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jack
ஜூன் 24, 2025 08:33

முகலாய சாம்ராஜ்யத்தில் அப்பாவை ஜெயிலுக்கு தள்ளி மகன் பேரரசராக வருவது சர்வசாதாரணம் இவர்கள் கட்ட பஞ்சாயத்து நடத்தும் தாதா நிலைமையில் கூட இல்லையே


திகழ்ஓவியன்
ஜூன் 24, 2025 07:04

BOTTLE மணி நிலை நாளுக்கு நாள் பொட்டி வாங்கும் திறன் குறைந்து கொண்டு வருகிறது


udayanan
ஜூன் 24, 2025 08:43

தொழில் மங்கிடும் என்ற பயமா?


முக்கிய வீடியோ