உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு உதவி பெறும் பள்ளியில் நேரடி நியமனம் வேண்டாம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

அரசு உதவி பெறும் பள்ளியில் நேரடி நியமனம் வேண்டாம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

விருதுநகர்: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு மூலம் நியமிப்பதற்கு பதில் நேரடி நியமனம் செய்வது பதவி உயர்வை தடுக்கும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கூறினார். அவர் கூறியதாவது: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்டம் 2018க்கு முரணாகவும், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் விதமாகவும் உள்ளது. தமிழகத்தின் எந்த பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தாத புதிய நடைமுறையை பின்பற்றி, பள்ளிக்காக உழைக்கும் மூத்த அனுபவமான ஆசிரியர்களை புறந்தள்ளி கார்ப்பரேட் பாணியில் நேரடி நியமனம் செய்வது என்பது அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஒட்டுமொத்த முதுகலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் பதவி உயர்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே தான் துவக்க கட்டத்திலே விழிப்புடன் செயல்பட்டு அரசு தடுக்க வேண்டும். பள்ளியின் அறிவிப்பை ரத்து செய்தும், அரசு உதவி பெறும் பள்ளி மூத்த ஆசிரியர்களை பாதுகாக்கும் விதமாகவும் நீதி வழங்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை