உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெட்ரோல், டீசல், காஸ் சப்ளையில் பாதிப்பு இல்லை  

பெட்ரோல், டீசல், காஸ் சப்ளையில் பாதிப்பு இல்லை  

சென்னை:'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெட்ரோல், 'பங்க்'களில், நான்கு நாட்களுக்கு தேவையான, பெட்ரோல், டீசல் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது; எனவே, அவற்றின் வினியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை' என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, இந்தியன் ஆயில் நிறுவனமே, அதிக சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. 'பெஞ்சல்' புயலால், எரிபொருள் விற்பனையில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், பொதுமக்களிடம் எழுந்துள்ளது.இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், கார்ப்பரேட் கம்யூனிகேஷன், தென் மண்டல தலைமை பொதுமேலாளர் வெற்றி செல்வகுமார் கூறியதாவது:சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்கூட்டியே பெட்ரோல் பங்க்குகளில், நான்கு நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காஸ் ஏஜன்சி நிறுவனங்களிலும், தேவையான அளவுக்கு சமையல் காஸ் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. எனவே, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் வினியோகத்தில், எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. இதுதொடர்பாக, பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். புயல் காரணமாக, வாகன ஓட்டிகள் வீட்டில் இருந்து வெளியில் வராததால், பெட்ரோல், 'பங்க்'கள் இயங்கினாலும், விற்பனை குறைவாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ