உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி நோயாளி இல்லை: மருத்துவ பயனாளர்கள் என அழைக்க புதிய உத்தரவு

இனி நோயாளி இல்லை: மருத்துவ பயனாளர்கள் என அழைக்க புதிய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை, இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. வழக்கமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் நோயாளிகள் என அழைக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நபர்களை இனிமேல் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவ பயனாளிகள்' அல்லது 'மருத்துவப் பயனாளர்கள்' என அழைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் வெளியிட்ட அரசாணையில், “மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சேவைகளைப் பெற வருபவர்கள் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவப் பயனாளிகள்' என குறிப்பிடப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவையாக உள்ளதால், “நோயாளி” என்ற சொல்லுக்கு பதிலாக “பயனாளி” என குறிப்பிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

naranam
அக் 07, 2025 13:58

'ர்' இல் முடிய வேண்டாமா?


saravanan Murugan
அக் 07, 2025 13:57

nothing changes in real...only name change...


Kannan Chandran
அக் 07, 2025 13:57

ஆமாம், சர்க்கரை பயனாளி, வாந்திபேதி பயனாளி என அழைக்கவும்..


SUBRAMANIAN P
அக் 07, 2025 13:56

அப்போ ஆங்கிலத்துல பேஷண்ட் என்பதற்கு பதிலாக என்ன சொல்லுவீங்க.. எல்லா மருத்துவமனைகளிலும் நோயாளின்னா சொல்றாங்க.. பேஷண்ட்டுன்னு ஆங்கிலத்துலதான் சொல்றாங்க.. நோயாளிகளே இருக்கக்கூடாதுன்னு இருக்கவேண்டிய இவங்க செயல்பாடுகள், பெயரை மாத்துவதில் இருந்தால் அதுவே திராவிடமாடல் என்று அழைக்கப்படும்..


Kjp
அக் 07, 2025 13:52

இன்னும் ஆறு மாதங்களில் என்னென்ன வருமோ.மக்கள் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.


N Srinivasan
அக் 07, 2025 13:52

இனி அரசு அதிகாரிகள் வாங்குவது லஞ்சம் அல்ல அதன் பெயர் விருப்பப்பணம்


Oviya Vijay
அக் 07, 2025 13:51

இம்சை அரசர் 2025 ஆம் புலிகேசி...


ராமகிருஷ்ணன்
அக் 07, 2025 13:51

திமுகவின் எல்லா திட்டங்களும் இந்த மாதிரியான டூபாகூர் டகால்டி பெயர்களை வைத்து சாதனை என்று மக்களை மடையர்களாக்கி விடுகிறது. இதனால் யாருக்கு என்ன பிரோசனம். அனால் இதற்கு செலவுகள் செய்ததாக சுருட்டி விடுவார்கள்.


சுரேஷ் பாபு
அக் 07, 2025 13:51

பிரமாதம். உலகத்தில் எங்கும் நடக்காத ஒரு பகுத்தறிவு மிகுந்த சீர்திருத்தம். தமிழ் நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆக்ஸ்போர்டு dictionary யிலும் Patient என்பதை Medical beneficiary என்று மாற்றுவார்களா?


வளவன்
அக் 07, 2025 13:50

எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா ?


சமீபத்திய செய்தி