உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள்

லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இனிமேல் நயன்தாரா என்று மட்டும் அழையுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவை, ஆனால் அது உங்களை என்னிடமிருந்து பிரித்துவிடும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l36tgzr4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனால் இனி லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம். என் பெயர் தான் எனக்கு நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டுமே குறிக்கும். இனிமேல் நயன்தாரா என்றே அழையுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் எனக்கு இவ்வளவு பெரிய பெயர் கிடைத்துள்ளது. வெற்றி மற்றும் தோல்வியின்போது என்னை தோளின் மீது சுமந்து உள்ளீர்கள்.எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்றாலும் உங்கள் ஆதரவு எப்போதும் நிரந்தரமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களை மகிழ்விக்கும் வகையில் எனது கடின உழைப்பும் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.சினிமா ஒன்றுதான் நம் அனைவரையும் இணைக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை கொண்டாடுவோம்.இவ்வாறு நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
மார் 05, 2025 14:55

அதுசரி.. நான் தெரியாமத்தான் கெக்கறேன்.. சினிமால டைட்டல் நேம் ல லேடி சூப்ர ஸ்டார்னு நியா பொட்டுகிட்டப்ப, உனக்கு நியே பட்டங்குடுத்துகிட்டப்ப உனக்கு தெரியிலியா உம்பேரு என்னான்னு..?? எது நெரந்தரமுன்னு புரிஞ்சா சரி..


Mecca Shivan
மார் 05, 2025 06:41

சினிமா பகுதியில் ஒரு மூலையில் இருக்கவேண்டிய சப்பை சேதியை இப்படி முன்பக்கத்தில் போடலாமா?


தமிழ் நாட்டு அறிவாளி
மார் 04, 2025 23:07

அது சரி. வயசு ஆனதும் பட்டம் வேண்டமாம்.