உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய நெடுஞ்சாலைகளில் இனி சூரியசக்தி விளக்குகள் ஒளிராது!

தேசிய நெடுஞ்சாலைகளில் இனி சூரியசக்தி விளக்குகள் ஒளிராது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சூரியசக்தி மின்விளக்குகளால் கூடுதல் செலவு ஏற்படுவதால், தேசிய நெடுஞ்சாலைகளில் அவற்றின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வழிகாட்டுதலின்படி, சுங்கச்சாவடிகளின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா கழிப்பறைகள்; சாலை விபத்துகளை தவிர்க்க ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகள். அருகேயுள்ள மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் மற்றும் போலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட விபரங்கள், இரவில் ஒளிரும் பலகைகளாக வைக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை பலகைகள் இரவில் தெரியும் வகையில், மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மின்கட்டணத்தை குறைப்பதற்காக, மாநிலம் முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 2020 முதல் சூரியசக்தி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வந்தன. தற்போது, சூரிய சக்தி மின்விளக்குகளை பொருத்தவும், பராமரிக்கவும் கூடுதல் செலவு ஏற்படுவதால், அவற்றின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ஒருவர் கூறியதாவது:சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சூரியசக்தி மின்விளக்குகள், தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்பட்டன. இவற்றை, எட்டு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றின் ஆயுட்காலமும் குறைவு. முதலில் பிரகாசமாக எரியும் விளக்குகள், நாளாக நாளாக மங்க துவங்கி விடுகின்றன. இதனால், வாகனங்களுக்கு போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை. இது, விபத்து ஏற்பட வழிவகை செய்கிறது. எனவே, பழையபடி மின்விளக்கு பொருத்தும் பணி நடக்கிறது.சென்னை பைபாஸ் சாலையில், சூரியசக்தி மின்விளக்கு பொருத்தும் திட்டத்தை மாற்றி விட்டு, 20 கோடி ரூபாய் செலவில் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரியசக்தி மின்விளக்குகள் இனி நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

nb
செப் 23, 2024 09:59

ஒரே குழப்பமா இருக்கு


vbs manian
செப் 23, 2024 09:41

சூரிய சக்தி விளக்கு மின்சார உற்பத்தி செலவு மிகவும் குறைவு. பராமரிப்பு முக்கியம்/. அதை செய்ய முடியவில்லை. மறுபடியும் பழைய வழி. டெண்டர் காண்ட்ராக்ட் இல்லாமல் எவ்வளவு நாள்தான் இருக்க முடியும்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 23, 2024 09:05

இதுமாதிரியே அரசாங்கத்துக்கு எலெக்ட்ரிக் கார்கள் இப்போ வாங்கி இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு அவை எல்லாம் உபயோகமில்லைன்னு தூக்கி எறியலாம்.


Rajpal
செப் 23, 2024 06:36

நேர நேரத்துக்கு வயிற்றுக்கு கொட்டிக் கொள்வது போல் சூரிய சக்தி உபகரணங்களையும் பராமரித்து வந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது. ஒரு பக்கம் புதிய சூரிய சக்தி உபகரணங்களை பொருத்துவார்களாம் இன்னோரு பக்கம் அதை எடுத்து எறிந்து விட்டு பழையபடி மீண்டும் மின்சார விளக்குகளை பொருத்துவார்களாம், இது என்னய்யா திட்டமிடல்??


அப்பாவி
செப் 23, 2024 05:43

லட்சக்கணக்கில் சோலார் விளக்குகளை பொருத்தி ஆட்டையப் போட்டாச்சு. பராமரிக்க செலவு ஆகும்னு இந்த தத்திகளுக்குத் தெரியாதா? அதையெல்லாம் எடுத்துட்டு புது டெண்டர் விட்டு புது விளக்கு பொருத்தி புது ஆட்டை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை