உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்

எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்

சென்னை:'நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இ.பி.எஸ்., பதில் அளித்தார். கடந்த சில தினங்களாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் கூட்டங்களில் பங்கேற்காமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். இதனால் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நிலவுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சட்டசபை வளாகத்தில் இன்று நடந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்துவிட்டார்.சென்னை தலைமைச் செயலகம், வளாகத்தில், இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இ.பி.எஸ்., அளித்த பதில் பின்வருமாறு:அது உங்களுக்கு ரொம்ப அவசியமா இருக்குமான்னு கேட்கிறேன். ஏங்க எங்கள பிரிச்சு பார்க்கிறதிலேயே இருக்குறீங்க. நல்லா உஷாரா கேள்வி கேக்குறீங்க. எப்ப பார்த்தாலும், இதுல ஏதாவது குழப்பம் வருமா, என்றுதான் இருக்கீங்களே தவிர ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். நாங்கள் இப்பொழுது ஒற்றுமையா தான் இருக்கிறோம்.யாராலும் பிரிக்க முடியாதுங்க. என்றைக்கு நான் முதல்வர் ஆனேனோ, அன்றைக்கு இருந்து, இந்த திட்டத்தை போட்டுக்கிட்டு தான் இருக்காங்க, ஆனால் அதையெல்லாம் உடைத்து எறிந்து கொண்டுதான் இருக்கிறோம். அ.தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது. முடக்க முடியாது. அப்படி முயற்சி செய்தால் மூக்கு உடைந்து போகும். இவ்வாறு இ.பி.எஸ்., பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
மார் 19, 2025 07:33

வெட்டி ஈகோ பார்த்து மீண்டும் திமுக சுலபமாக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு தராதீர்கள் அதிமுக அனைத்து குரூப் கோளும் சேர்ந்து பாமக தேமுதிக விஜய் கூட்டணி வைத்தால் ஆட்சியை பிடிக்கிறார்களோ இல்லையோ பலமான போட்டியாவதுகொடுக்கலாம்


SADIQBASHA syed
மார் 18, 2025 09:49

இருப்பர்


SADIQBASHA syed
மார் 18, 2025 09:48

இப்ப எடப்பாடி கதை முடிந்தது அடுத்த தேர்தலுக்குள் அவர் இடத்தை இழந்து சிறையில் இருப்பர்


M Ramachandran
மார் 18, 2025 00:12

சும்மா ரீல் சுத்த வேண்டாம் . அப்படியென்றால் ஒரு பதவியையும் கொடுக்காமல் பழைய பதவிகளையும் பிடுஙகின காரணம் என்ன.


Easwar Kamal
மார் 17, 2025 23:32

சட்ட சபையில் ஓபிஸ் மற்றும் செங்கோடனும் சேர்ந்து அமர்த்தது பார்த்து எபிஸ் வயித்தில் புலிகரிச்சிருக்கும். அதன் புலி பம்முது


தமிழன்
மார் 17, 2025 23:04

நேற்று "அவரிடமே போய் கேளுங்கள்" இன்று "எங்களை யாராலும் பிரிக்க முடியாது" அதை சோதிக்க 1 நாள் மக்கள் வரிப்பணத்திலேயே சட்டசபையில் டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தியாச்சே எஸ்.ஆர் பெவிகால் போட்டு ஒட்டுயிருப்பாங்க போல இப்படித்தான் 2019ல் இரட்டை குழல் துப்பாக்கின்னு ஒருத்தர கூவினாப்ல இப்போ அந்தாளு கதி விஷ்வகுரு பாதத்தில் இவருக்கு.........??


Haja Kuthubdeen
மார் 17, 2025 21:44

பஞ்சாயத்து முடிஞ்சாச்சு..போயி அவுக அவுக வேலய பாருங்க..அஇஅதிமுகவை எவனும் அசச்சு பார்க்க முடியாது.


Raja
மார் 17, 2025 21:17

செங்கோட்டையன் , தனது மகனுக்கு ராஜ்யசபா பதவி கேட்டதாகவும் அதற்கு திரு. எடப்பாடி கட்சியில் சீனியர் பலர் இருக்கும்போது மகனுக்கு தர முடியாது என்று மறுத்து விட்டதால் இந்த சதி....


sankaranarayanan
மார் 17, 2025 21:00

மூக்கே இல்லாத சூர்ப்பனகையைப்போல இனி கட்சி ஆகிவிடும் இதில் என்ன சந்தேகம் இப்படியே தனது அடக்குமுறையினால் எல்லாரையும் பணிய வைக்க முடியாது நேற்று கட்சிக்குள் வந்த இடப்படி பேசலாமா எல்லோரையும் அரவணைத்து அனுசரித்துதான் போக வேண்டும் ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல கூவத்தூரில் ஆரம்பித்த கதைதான் காரணம் அதற்கு முன்பு இடைப்பாடி என்றொருவர் கட்சியில் இருக்கிறாரா என்றே யாருக்குமே தெரியாது இவர் கட்சியில் மூத்த தலைவர்கள் அனைவரையும் விரட்டிய அடித்துவிட்டார் இனி கட்சி அம்பேல்தான்


K.Ramakrishnan
மார் 17, 2025 20:32

பிரிக்க முடியாது என்றால், செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு அவரிடம் கேளுங்கள் என்று நழுவியது ஏன் சார்?